ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறந்ததா?

  • 15 மே 2018

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை காட்டிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து ஏற்புடையதா? என வாதம் விவாதம் பகுதியில் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் அளித்த பதில்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

''ஆமாம் செய்தியாளர்களை சந்திக்கிறார். கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். ஜெயலலிதா அவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?'' என பேஸ்புக்கில் கேட்டுள்ளார் லோகநாதன் கந்தசாமி.

''ஜெயலலிதா ஆட்சி கருப்பா பயங்கரமா இருந்தது, பழனிச்சாமி ஆட்சி பயங்கரமா கருப்பா இருக்குது'' என எழுதியுள்ளார் கஜப்பா.

''ஜெயலலிதா வழியில் வேணும்னா சொல்லலாம். ஆனால், அதை விட சிறப்பு என்று சொல்ல முடியாது'' என கவுமித்ரா என்ற நேயர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

''இது திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் சொந்த கருத்து இதை அரசியலாக்க வேண்டாம்'' என எழுதியுள்ளார் கனி

''சிரிப்புடையது. அவரின் மீது பல விமர்சனம் வைக்கபட்டாலும் இன்றும் ஒரு பெண்ணாக சமூகத்தில் அவர் காட்டிய ஆளுமைக்கு வார்த்தைகளே இல்லை. இன்று நடக்கும் ஆட்சி மத்திய அரசின் தயவில் நடக்கும் எந்த சொந்த முடிவும் எடுக்க முடியாமல் பதவி என்ற ஒன்றுக்காக நடக்கும் நாடகம். காலம் நல்ல பதிலை தரும்''. என அருண் எஸ் என்ற நேயர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

''எப்படியோ ஜெயலலிதா புகழை மங்கச் செய்ய கடைபிடிக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று! திண்டுக்கல் சீனிவாசனை பேச விட்டு அதிமுகவினரை ஆழம் பார்க்கும் முயற்சியில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஈடுபட்டு வருகின்றனர்'' என ஒரு நேயர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

''ஆளுமைக்கு உறைவிடமாக இருந்தஜெயலலிதா வழியில் சிறந்த ஆட்சியை நடத்திட்டு இருக்கு அதிமுக அரசு'' என ஷாரிக் என்ற நேயர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்