வாதம் விவாதம்: கர்நாடக தேர்தல்: பாஜகவுக்கு ஓபிஎஸ்ஸின் வாழ்த்து அரசியல் நாகரீகமா? எஜமான விசுவாசமா?

  • 17 மே 2018

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை வாழ்த்தி பேசியதன் மூலம் ஓபிஎஸ் தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா? என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக, சிதம்பரத்தின் இந்த கேள்விகள் சரியானதா? வாழ்த்தி பேசியதை அரசியல் நாகரீகம் என்று கருத முடியுமா? என வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

படத்தின் காப்புரிமை AFP

அதற்கு பிபிசி நேயர்கள் அளித்த பதில்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

முற்றிலும் சரியான கேள்வி. இவர் வாழ்த்தி பேசி இருந்தால் அரசியல் நாகரீகமாக ஏற்றிருக்கலாம். இவர் இப்பொது காட்டி இருப்பது எஜமான விசுவாசம் என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருக்கிறார் கோமான் முகம்மது.

வெற்றியை வாழ்த்துவதற்கும், வென்றோரை மகிழ்விப்பதற்காக வாழ்த்துவதற்கும் ஆன பொருள் வேறுபாடுகள் நிறைய உள்ளது. வெற்றியின் முடிவை அறியும் முன்னரே தங்களுடைய நம்பக தன்மையை வளர்த்துக் கொள்வதற்காக மிகை படியாக வாழ்த்துவதானது "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடிவிடும்" என்பது போல் அரசியல் ஆதாயத்திற்கான அன்னிச்சை செயலைதான் வெளிப்படுத்துமே ஒழிய அதனை அரசியல் நாகரீகமாக எடுத்துக் கொள்ளுதல் ஆகாது என்கிறார் சக்தி சரவணன்.

படத்தின் காப்புரிமை Getty Images

சரோஜா பாலசுப்பிரமணியன், "தலைக்கு மேலே கத்தி தொங்கும்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசையா? ஆட்சியே ஆட்டம் காணும்போது, ஆட்சியை தக்க வைக்கவே இந்த வாழ்த்து." என்று கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

சிதம்பரத்தின் கேள்வி சரியானது அல்ல,அதே நேரத்தில் ஓபிஎஸ் அவர்களின் துதிபாடலும் சரி அல்ல என்கிறார் சண்முகம் வரதராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: