'நிப்பா' வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன?

'நிப்பா' வைரஸ் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிப்பா வைரஸ் என்றால் என்ன?

  • நிப்பா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரசாகும். இதன் பிறப்பிடம் fruit bats எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
  • 1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
  • 2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிப்பா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவப்படுவதும் கண்டறியப்பட்டது.
  • நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அதன் அறிகுறிகள் என்ன?

ஆசியாவில் சில விலங்குகள் மூலம் பரவும் நிப்பா வைரஸ், எந்த வயதுடையவர்களையும் தாக்கும். அதன் அறிகுறிகள்

  • மூளை வீக்கம்
  • கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி
  • அயர்வு
  • சுவாசப் பிரச்சனைகள்
  • மனக்குழப்பம்

நிப்பா வைரஸ் தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை

நிப்பா வைரஸ் தாக்குதலுக்கு என குறிப்பாக சிகிச்சை ஏதும் இல்லை.

கோழிக்கோடில் அதிகளவில் இந்த வைரஸ் பரவி வந்தாலும், கேரளா முழுவதும் இதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: