பாஜக பேரம் பேசிய ஆடியோ போலியானது: காங்கிரஸ் எம்.எல்.ஏ

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க தன் மனைவியிடம் பேரம் பேசப்பட்டதாக வெளியான ஆடியோ போலியானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பார் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் போலியானது என கூறியுள்ள அந்த ஆடியோவை காங்கிரஸ் எம்.எல்சி உக்ரப்பா வெளியிட்டார் என்றும், சிவராம் ஹெப்பார் மனைவியிடம் பாஜக தலைவர்கள் 15 கோடி ரூபாய் தரத் தயார் எனக் கூறுவதாக அந்த ஆடியோ அமைந்துள்ளது எனவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், ஆபாச வீடியோக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த பதிலை தாக்கல் செய்யாத, யாகூ, பேஸ்புக், கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் அகிய நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு நிலையான ஆட்சியைத் தரும் என்று அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். மேலும், அமைச்சரவை பகிர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் பேரத்தில் ஈடுபடப்போவதில்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளதாகத் தினமணி செய்தி கூறுகிறது.

தி இந்து தமிழ்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகம், புதுச்சேரியில் 10 லட் சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்கிறது தி இந்து தமிழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: