நாளிதழ்களில் இன்று: உள்ளூர் விமானங்களுக்கு இனி 'போர்டிங் பாஸ்' தேவையில்லை

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்

படத்தின் காப்புரிமை Getty Images

உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள், போர்டிங் பாஸ் எனப்படும் விமானப் பயணத்துக்கான அனுமதிச் சீட்டு பெறாமல் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், விமானப் பயணிகளின் டிக்கெட், அடையாள அட்டை போன்ற ஆவணங்களுக்கு மாற்றாக டிஜி-யாத்ரா எனப்படும் பிரத்யேக அடையாள எண் மூலம் உள்ளூர் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டத்தை விமான போக்குவரத்து துறை செயல்படுத்த துவங்கி உள்ளது என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி:

படத்தின் காப்புரிமை Getty Images

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆணையம், விசாரணை காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது என்றும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகத்தின் 24-வது முதல்வராக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வராக பதவி ஏற்கிறார்.

பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை அணி திரட்டும் நோக்கத்தில், குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர் என தினத்தந்தி செய்தி கூறுகிறது.

தி இந்து தமிழ்

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கஃபீல்கான் விருப்பம் தெரிவித்துள்ளதை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஸஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்தநிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கஃபீல்கான்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பரஸ்

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 3 பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் மையப்பகுதியில் நடந்துள்ள இச்சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: