தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: தமிழக அரசு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று குறைந்தது 9 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெலைட் தாமிர உருக்காலையை மூடுவதற்காக மே 22ஆம் தேதி நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான நபர்கள் முற்றுகை இட்டபோது ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மே 25ஆம் தேதியன்று தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்