கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்?

இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத). தலைவரான எச்.டி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

முதல்வரானார் குமாரசாமி
படக்குறிப்பு,

முதல்வரானார் குமாரசாமி

அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

கடந்த வாரம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் கடந்த சனிக்கிழமையன்று எடியூரப்பா பதவி விலகினார். இதனால் கர்நாடக மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டு முதல்வர் பதவியேற்பு நிகழ்வுகள் நடந்துள்ளன.

இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிபிஎம் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களான மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு குமாரசாமிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

முன்னதாக, தனக்கு பெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா தனது பதவியை சனிக்கிழமையன்று ராஜிநாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கட்சியின் எச்.டி குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: