தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப என்ன வழி? நேயர் கருத்து

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடுதான் ஒரே வழியா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

இது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. மக்கள் எழுச்சியை சகிக்க முடியாத அரசுகளும் முதலாளித்துவமும் இணைந்து நடத்திய நரவேட்டை. சில முன்னணி மக்கள் அரசியல் தலைவர்களை பலிகொள்ளும் அல்லது பயமுறுத்தும் சதி என்கிறார் பகலவன் எனும் நேயர்.

நெல்லை முத்துச்செல்வம் எனும் நேயர், "மக்கள் நிம்மதியாக சுவாசிக்க முடியாத படி இருந்தால் எத்தனை நாள் பொறுமையாக இருப்பார்கள். கலவரத்தை கட்டுபடுத்த மாநில அரசிடம் இப்போதும் வழி இருக்கிறது ஆலையை மீண்டும் திறக்க ஒரு காலமும் அனுமதிக்கமாட்டோம் என உறுதியாக அரசாணையாக வெளியிட்டால் அடுத்த நொடியில் இயல்பு நிலை திரும்பிவிடும்," என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கார்பரேட்டுகளின் இத்திட்டம் எல்லா நாடுகளிலும் தொடர்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே மக்களால் தட்டி கேட்கபடுகிறது என்று கூறுகிறார் பிஸ்ருல் ஹஃபி.

ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி சிதைக்கப்பட்டது? அதைவிட மோசமான நிலையை காவல்துறை அதிகாரிகள் செய்து உள்ளனர். இது முழுக்க முழுக்க திட்டம் போட்டு செய்யப்பட்டது என்கிறார் ஹரிஸ் கான் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

ஆயுதத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றவரை தேசத்தந்தையாக ஏற்றுக் கொண்ட நமது நாட்டில் நடப்பது, நமது நாட்டிற்கு அவமானம் என்று கூறியுள்ளார் அறவழி சரவணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: