நாளிதழ்களில் இன்று: தூத்துக்குடியில் தடையை மீறியதாக மு.க. ஸ்டாலின், கமல் மீது வழக்குப் பதிவு

இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள்.

தினமணி - மு.க. ஸ்டாலின், கமல் மீது வழக்குப் பதிவு

Image caption மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மீது தடையை மீறியதாக தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி சென்றதாகவும், வன்முறை ஏற்பட வாய்ப்பை உருவாக்கியதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீதும் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர்- கோலியின் சவாலை ஏற்ற பிரதமர்; கிண்டல் செய்த எதிர்கட்சிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் மூலம் விடுத்துள்ள உடற்பயிற்சி சவாலை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் பலரும், தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து- ஆங்கிலம் - தூத்துக்குடியை விட்டு வெளியேறும் திட்டமில்லை : ஸ்டெர்லைட் அதிகாரி

தூத்துக்குடியை விட்டு வெளியேறும் திட்டமில்லை என்றும், சட்ட வழியை நாடப் போவதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார் ஸ்டெர்லைட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ராம்நாத்.

அவரது நேர்க்காணலை வெளியிட்டுள்ளது அந்த நாளிதழ். வெளி சக்திகளும், என்.ஜி.ஓ.க்களுமே இப்போதைய பிரச்சினைகளுக்கு காரணம் என்று ராம்நாத் கூறியதாகவும் அந்த நேர்க்காணல் செய்தி தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்