''கோலியின் சவாலை ஏற்கும் மோதி தமிழர்களின் அலறலை கண்டுகொள்ளவில்லை''

மோதி

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA

தூத்துக்குடியில் 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுகவும், காங்கிரஸும் காரணம் என்ற மத்தியமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளகூடியதா? என பிபிசி தமிழ் சமூக ஊடக பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு இங்கே

''விராட் கோஹ்லியின் ஃபிட்னஸ் சவாலை ஏற்கும் மோதி தமிழர்களின் அலறல்களை கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் காக்கிறார்'' என்பது மொஹம்மத் ஃபாரூக்கின் கருத்து.

''அவங்க காரணம் என்று எத்தனை காலம் தான் சொல்வீர்கள உங்களுக்கு பொறுப்பு இல்லையா'' என சிவகுமார் எனும் நேயர் கேள்வியெழுப்பியுள்ளார்.

''அவுங்க சரி இல்ல விடுங்க. மத்திய அரசே உங்களதுதான. நீங்க ஏன் அந்த ஆலைய மூடமாட்டீங்கிறீங்க சார்'' என கேட்டுள்ளார் ராம் ராஜ் எனும் நேயர்.

'' நெருப்பை பற்ற வைத்தவன் ஒருவன் இன்னொருவன் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி தீயை வளர்ந்தவன். இதில் நாம் யாரை குற்றவாளி என்று சொல்ல முடியும்?'' என்கிறார் ராஜேஷ் குமார்

''விமர்சிப்பதை விடுத்து திறன் இருந்தால் தீர்வுகாண முயலுங்கள்'' என எழுதியுள்ளார் மூர்த்தி சுரேஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: