தமிழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஆசிரியர்கள் மூலம் ஆங்கில பயிற்சி

இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள்.

தினமணி

பட மூலாதாரம், Getty Images

வரும் கல்வியாண்டில் இந்தியாவே திரும்பிக் பார்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கும் ஆங்கிலம் கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

மேலும், நிபா வைரஸ் காய்ச்சலால்,கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாகடர் குழந்தைசாமி கூறியுள்ளதாகவும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.

இந்நிலையில், மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது முடிவு செய்திருக்கிறது என்றும், எந்த நேரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், தினத்தந்தி செய்தி கூறுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பரஸ்

மூத்த பாமக தலைவரும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினருமாக இருந்தவருமான காடுவெட்டி ஜெ. குரு(57) காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்றிரவு உயிர் பிரிந்தது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து

உத்தரகண்ட் மாநிலத்தில், மக்கள் கூட்டத்தினால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை சீக்கிய போலிஸ் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றினார். அந்த இளைஞரை, சீக்கிய போலீஸ்காரர் கட்டியணைத்து, கோபத்தில் இருந்த கூட்டத்திடம் இருந்து காப்பாற்றினார். இதனால் அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: