வாதம் விவாதம்: ''ஸ்டெர்லைட் இருந்த இடம் விவசாய நிலமாக மாறும் போது நம்புவோம்''

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், Getty Images

''ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு போராட்டத்தின் வெற்றியா?'' என நேற்றைய வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''வெற்று அறிவிப்பு போதாது. இடத்தை காலி செய்ய வேண்டும். அப்போ தான் திரும்பி வர முடியாது. இல்லையென்றால் 6 மாதமோ 1 வருடமோ கழித்து திரும்பவும் ஆலையை நடத்துவார்கள்." என்கிறார் நந்தகுமார் அன்பழகன் எனும் நேயர்.

''நிரந்தரமாக ஆலை மூடப்பட்டால்தான் போராட்டத்திற்கு வெற்றி. இதுவரை எத்தனையோ முறை விபத்துக்கள் ஏற்பட்டும், போராட்டங்கள் நடத்தியும் ஆலை மூடப்படவில்லை. திரும்பத்திரும்ப மக்கள் ஏமாந்தது போதும்.'' என்பது சரோஜா பாலசுப்ரமணியன் எனும் நேயரின் கருத்து.

''தனி முதலாளிகளின் வருமானத்திற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பொது மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு இதுவே ஒரே வழி'' என்கிறார் செந்தில்.

''கொழுந்து விட்டு எரியும் மக்கள் போராட்டத்தை சற்று குளிர்விப்பதற்கான முயற்சிதான் குடிநீர், மின்சார துண்டிப்பும், ஆட்சியர் அறிவிப்பும். எதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் மக்கள் இறப்புக்கு வருத்துவதாகவும், ஆலைக் கூடிய விரைவில் செயல்பட தொடங்கும் என்பார்'' என பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.

''இது தற்காலிக மருந்து'' என்கிறார் சீனிவாசன்.

''இப்போது மக்களின் கோபத்தை தனித்துவிட்டு பின் தூத்துக்குடியில் என்ன நடந்தாலும் வெளியில் தெரியாத அளவுக்கு இணையம்,குடிநீர்,மின்சாரம் அனைத்தையும் நிறுத்தி கொடுமை படுத்தினாலும் ஆச்சரியபட ஒன்றும் இல்லை. ஏனெனில் நடப்பது ஆட்சி அல்ல அதிகாரம்'' என்பது சந்திர மாணிக்கத்தின் கருத்து.

''மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி இது'' என்கிறார் வேலுசாமி.

''ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. ஆலை மூடப்படும் என்ற அரசின் தற்காலிக உத்தரவும் போராட்டக்காரர்களுக்கு தற்காலிக வெற்றி தான்'' என பதிவிட்டுள்ளார் தேவ அன்பு.

''இது வெறும் கண்துடைப்பு'' என்கிறார் தினேஷ்.

''இந்த தடையுத்தரவு எத்தனை நாளைக்கு?'' என கேட்டுள்ளர் கார்த்திக் எனும் நேயர்.

''மக்களை ஏமாற்றும் வேலை. ஆலையை நடத்துவோம் என்று வேதாந்தா கொக்கரிக்கிறது'' என்கிறார் சாமுவேல்.

''திசை திருப்புவதின் முதல் படி'' என்கிறார் ஹம்ஜ் எனும் நேயர்.

''ஸ்டெர்லைட் இருந்த இடம் விவசாய நிலமாக மாறும் போது நம்புவோம்'' என்கிறார் ராஜகுமார்.

''அரசின் நடவடிக்கையையே மக்கள் கேட்கின்றனர். வாய்வழி உத்தரவை அல்ல`` என பதிவிட்டுள்ளார் முருகன்.

``மக்கள் வேகத்தை குறைக்கும் அறிவிப்பு இது'' என்கிறார் ரங்கநாதன்.

''தற்காலிக அறிவிப்பு போரட்டத்தை நிறுத்துவதற்கு'' என்கிறார் பாலமுருகன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: