ஸ்டெர்லைட்: காணாமல் போனார்களா போராட்டக்காரர்கள்?

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மேலும் பலர் காணாமல் போனதாக பொதுமக்களின் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஊடகங்களிலும் அதற்கான ஆதாரங்கள் என்று கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பகிரப்படுகின்றன.

sterlite

'இது பற்றிய உண்மையைக் கண்டறிவது யார் பொறுப்பு?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"பல புயல்களில் காணமல் போனவர்களை , வெளி மாநிலங்களில் வேலைக்கு போனவர்களை காப்பாற்ற தெரியாத அரசுகள் இனியும் கண்டு பிடிக்க குழு அமைப்பர். சில இலட்சம் காசோலை வழங்குவர். இதே நிலை தொடரும், " என்று கொக்கி சுரேஷ் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர் கூறுகிறார்.

"சமூக அக்கறையுள்ள செய்தியாளர்கள் , தன்னார்வலர்கள் ஒவ்வொரு தெருவிலும் வசிக்கும் ஒருவர் அந்த தெருவில் எத்தனை நபர் காணவில்லை என்று வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது போன்று அனைத்து தெருவிலும் கணக்கெடுத்து ஒருங்கிணைக்க வேண்டும்," என்கிறார் மைதீன்.

ரா.தம்பிராஜ் எனும் ஃபேஸ்புக் நேயர் இவ்வாறு கூறுகிறார்: "ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று உயிரிழப்பு எண்ணிக்கையை 13 ஆக அரசு குறைத்து காட்டியுள்ளது, ஆனால் பலி எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகின்றன."

"யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க போவதில்லை. இதை பற்றி செய்தி அமைதியாகி விடும். ஆளும் தரப்பு கடையடைப்பு என்றால் அனைத்து கடைகளும் முடப்படுகின்றன. அதே நேற்றைய கடையடைப்பு என்னவானது? பல கடைகள் செயல்பட்டன, " என்பது அருண் எனும் ட்விட்டர் பதிவரின் கருத்து.

"நிச்சயமாக அரசுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது, ஆனால் கலவரத்துக்கு காரணமான அரசு காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்காது," என்று கூறுகிறார் பாலன் சக்தி எனும் ட்விட்டர் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: