தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்கள் எங்கே? மனித உரிமை ஆர்வலர் கேள்வி

இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ்,.

கைது செய்யப்பட்டோர் எங்கே?

மே 22-ம் தேதி சம்பவத்துக்குப் பிறகு தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட நபர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய அவர், "22ஆம் தேதி கலவரத்துக்கு பிறகு நிறைய கைதுகள் நடந்திருக்கிறது. இதனையடுத்து, தெரு தெருவாகப் போய் இளைஞர்களை காவல்துறை அடித்ததாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்" என்றார்.

"ஒவ்வொரு வீதியாக சென்று அமைதியாக இருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்ய காரணம் இருந்தால், உரிய நடைமுறைகளை பின்பற்றி கைது செய்யலாம், ஆனால், அவர்களை அடிக்க அதிகாரம் இல்லை. இதெல்லாம் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் வெளிவந்ததால்தான் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியது" என்றும் ஹென்ரி டிஃபேன் தெரிவித்தார்.

இலவசமெட்ரோபயணம்

சென்னை நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் பொதுமக்கள் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனால் மெட்ரோ ரயிலில் கடந்த இரண்டு நாட்களாகக் கூட்டம் அலைமோதியது.

மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு

உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் சிவகுமார் ஒலிப்பதிவை நேற்று சமர்ப்பித்தார்.

வெனிசுவேலா மீதான தடை தொடரும்: அமெரிக்கா

படக்குறிப்பு,

விடுவிக்கப்பட்ட அமெரிக்க-வெனிசுவேலா தம்பதி.

அமெரிக்க கைதி மற்றும் அவரது மனைவியை சனிக்கிழமை வெனிசுவேலா விடுவித்திருந்தாலும் அந்நாட்டின் மீதான தடை தொடரும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜோஷுவா ஹால்டும் வெனிசுவேலாவைச் சேர்ந்த அவரது மனைவி தாமி கேண்டெலோவும் அவர்களது விடுதலைக்கு உதவிய அமெரிக்க செனட்டர் பாப் கார்க்கருடன் அமெரிக்கா அடைந்தனர்.

ஆயுதம் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த தம்பதி இரண்டாண்டுகாலம் சிறையில் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: