இலங்கை: தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு 11 சிறார்கள் பலி

இலங்கையில் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மருத்துவர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டார்.

நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால், தான் ஏனைய பிரிவுகளை சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை மேலதிகமாக சேவைகளில் ஈடுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தென் மாகாணத்தில் தற்போது இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய மருத்துவர் ஜி.விஜேசூரிய, எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, பிறப்பிலிருந்தே சில நோய்கள் காணப்பட்ட சிறார்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறார்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்