ஸ்டெர்லைட் மூடல்: தமிழக அரசின் அரசாணை சொல்வது என்ன?

ஸ்டெர்லைட் படத்தின் காப்புரிமை Getty Images

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவதற்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணை சொல்வது என்ன?

ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை மேற்கோள்காட்டி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில், "தூத்துக்குடி சிப்காட் தொழில்வளாகத்தில் செயல்பட்டுவரும் வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்காலைக்கான இசைவாணையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுத் துறை தன்னுடைய 9.04.2018 தேதியிட்ட ஆணையின் மூலம் புதுப்பிக்கவில்லையென்பது தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 23.5.2018ஆம் தேதியன்று ஆலையை மூடுவதற்கான ஆணையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்தது. ஆலைக்கான மின்சாரம் 24.05.2018ஆம் தேதியன்று துண்டிக்கப்பட்டது.

அரசியல் சாஸனத்தின் 48வது பிரிவின்படி, "தேசத்தின் காடுகளையும் வனஉயிரிகளையும் பாதுகாக்கும் பொறுப்பும் சூழலை பாதுகாத்து மேம்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது."

"1974ஆம் வருடத்தின் தண்ணீர் பாதுகாப்புச் சட்டத்தின் 18 1-பி பிரிவின்படி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை அரசு ஏற்பதாகவும் அதனை மூடி சீல்வைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடுவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணையை தமிழக அரசின் முதன்மைச் செயலர் நஸீமுத்தீன் வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்