வாதம் விவாதம்: ''ரெட்டி பிரதர்ஸ் ஊழல் பற்றி நரேந்திர மோதி பேசாதது ஏன்? ''

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

ஊழல் குறித்து பேச பிரதமர் நரேந்திர மோதிக்கு தார்மிக அடிப்படையில் எந்த தகுதியும் இல்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த கருத்து ஏற்புடையதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

''கரைபடியாத கைக்கு சொந்தகாரர் மோதி அவர்களே லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாது ஏன்? நாட்டில் லஞ்சம்,ஊழல் இல்லையா?பணம் மதிப்பு இழப்பு பின் யாரும் கருப்பு பணம் இல்லாமல் ஒழிந்து விட்டதா?Gst க்குபின் அனைத்து வகை விற்பனை பில்லோடுதான் நடக்கிறதா?'' என கேட்டுள்ளார் அய்யனார்.

''தொடக்கத்தில் நானும் நம்பினேன். கருப்பு பணத்தை ஒழிப்பார் ஊழலையும் ஒழிப்பார் என்று. ஆனால் இந்த நான்கு ஆண்டுகள் நடவடிக்கைகள் மூலம் அது என்னுடைய முட்டாள்தனம் என்று புரிந்து கொண்டேன். ஊழல் பற்றி பேச மோதிக்கு தகுதி இல்லை`` என கூறியுள்ளார் குமார் ஆனந்த்.

''ஊழல் பற்றி பேச என்ன தகுதி ஒருவருக்கு வேண்டும் என விளக்குவாரா குமாரசாமி?. நான்கு ஆண்டுகளாகிவிட்டது ஒரு குற்றசாட்டையாவது ஆதார பூர்வமாக நிரூபித்தார்களா எதிர்க்கட்சிகள் . தாங்கள் வெற்றிப்பெற்றால் ஜனநாயகம் வென்றது என்பார்கள் தோற்றால் ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு செய்கிறார்கள் என்று சொல்வார்கள். விளையாட்டு பள்ளியில் பயிலும் பால் மனம் மாறாத குழந்தைகளின் குற்றசாட்டுகள் போல உள்ளது எதிர்க்கட்சிகள் நடவடிக்கை'' என்கிறார் முத்து செல்வன்.

''கொள்கை, குறிக்கோள்களை வகுத்து மக்கள் நலன்களுக்காக நேர்மை தவறாது செயல்பட்டு வந்த அரசியல் எப்பொழுதோ மலையேறிவிட்ட நிலையில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதில் மக்கள் வியப்படைவதைக் காட்டிலும் தங்களது அரசியல் பார்வையை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.'' என்கிறார் சக்தி சரவணன்.

''உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் எவருக்கும் தகுதி கிடையாது'' என்பது ராஜேசின் கருத்து.

''நேரடியாக ஊழல் செய்வதுதான் தவறு என்றில்லை அந்த ஊழலுக்கு துணைபோவது மற்றும் அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறுதான். அந்த வகையில் மோதி மீதுள்ள குற்றச்சாட்டுகள் ஏராளம் உள்ளன. சிறு உதாரணம் ரெட்டி சகோதரர்கள் இன்னமும் பிஜேபியில்தான் இருக்கிறார்கள்'' என கூறியுள்ளார் கண்ணதாசன் எனுன் நேயர்.

''மோதிக்கு நேரடியாக தொடர்பில்லை என்றாலும், அவர் ஆட்சியில் நடக்கும் அத்தனை ஊழலுக்கும் பிரதமரான அவர்தான் பொறுப்பு. ஆனால், அதை குமாரசாமி சொல்வதுதான் வேடிக்கை.'' என பதிவிட்டுள்ளார் சரோஜா.

''குமாரசாமியின் கருத்து ஏற்புடையது.இவர் கணக்கை தப்பா போடுகிற குமாரசாமி அல்ல.`` என்கிறார் பாலுசாமி

``ரபேல் ,கங்கை நதி தூய்மை பணம் இந்த இரண்டு டீலில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று அறிய அடுத்த கட்சி ஆட்சி வரும் வரை காத்திருக்க வேண்டும். அதனால் சாமி சொல்வது உண்மை`` என கூறியுள்ளார் கனி எனும் நேயர்.

``அப்படி பேசுவதற்கு தகுதியிருப்பதாக நினைத்தால் ரெட்டி பிரதர்ஸ்களின் ஊழல் பற்றி எங்கு பேசியிருக்கிறார்?`` என கேட்டுள்ளார் அபு முஜாஹித்.

``எடியூரப்பாவை ஏன் முதலமைச்சர் வேட்பாளாராக அறிவித்தது ஏன்? அவர் பேசுவது ஒன்று நடப்பது ஒன்று`` என்கிரார் பிரபாகரன்.

``ஊழல் பற்றி பேச தகுதி உள்ளவர்கள் பேச வேண்டும்!``என்கிறார் பொன்னப்பன்.

``இப்போது பாஜக பணக்கார கட்சி எப்படி`` என கேள்வி எழுப்பியுள்ளார் ராஜகோபால்.

``ஊழலே பண்ணாதவருக்கு அத பத்தி பேச தகுதி இல்லைதான்!`` என கூறியுள்ளார் சரவணன்.

``கருப்பு பணத்தை வெளியே கொண்டுவருவோம்னு சென்னீங்களே என்ன ஆச்சு?`` என கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: