நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலை மூடலால் என்ன பொருளாதார பாதிப்பு?

சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஸ்டெர்லைட் மூடலால் என்ன பாதிப்பு?

படத்தின் காப்புரிமை Getty Images

தூத்துக்குடியில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இந்தியாவின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் 40%ஐ உற்பத்தி செய்ததாகவும், அந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் மின் துறையில் உள்ள 800 சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தாமிர ஊருக்கு ஆலைகள் திறக்கப்படாவிட்டால் மார்ச் 2020 முதல் இந்தியா தாமிரம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் முன்கூட்டியே இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) - மத்திய அரசுக்கு பதிலளிக்காத மாநில அரசுகள்

படத்தின் காப்புரிமை Thinkstock

திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்த தங்களது கருத்தை தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த மாநில அரசும் பதிலளிக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு கட்சிகள் ஆட்சி செய்யும் 21 மாநிலங்கும் அவற்றுள் அடக்கம்.

தினமணி - பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

படத்தின் காப்புரிமை AFP

2016 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை என்று தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

விவசாயிகள் அவதிப்படக்கூடாது என்பதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டதா, இல்லை தனியார் நிறுவனங்கள் விவசாயிகழ்ப்பெயரைச்சொல்லி அரசிடம் கட்டணம் பெற்று லாபம் ஈட்ட இத்திட்டம் அறிவிக்கப்பட்டதா என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தினத்தந்தி - சட்டப்பேரவை கூட்டத்தொடர்

துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

மொத்தம் 23 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 9ஆம் தேதி முடிவடைகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்