நாளிதழ்களில் இன்று: கோடையில் தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) - கோடையில் அதிகரித்த மது விற்பனை

படத்தின் காப்புரிமை Getty Images

கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இந்த ஆண்டு மே மாதம் 39% அதிகரித்துள்ளது.

இதுவரை இந்த மாதம் 1,720 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு 1,238 கோடி ரூபாயாக இருந்தது.

தினமணி - 16.57 லட்சம் கோடி ரூபாய்

படத்தின் காப்புரிமை Getty Images

பெட்ரோலுக்காக நாம் செலுத்தும் பணத்தில் 86% அரசுக்கு வரியாகப் போகிறது என்று தினமணியின் நடுப்பக்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி மூலம் 16.57 லட்சம் கோடி ரூபாயை மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூலித்துள்ளதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டைநிறுத்தம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சண்டை நிறுத்தத்தை முழுமையாகக் கடைபிடிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

2003இல் கையெழுத்திடப்பட்ட சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறையில் அமல்படுத்த இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.

டெக்கன் கிரானிக்கல் - தூத்துக்குடி செல்லும் ரஜினிகாந்த்

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காயமடைந்தவர்களை பார்க்க நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி செல்கிறார்.

அரசு மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: