நாளிதழ்களில் இன்று: ''போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" - கமல் ஹாசன்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

"போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" என்று இன்று (திங்கள்கிழமை) கர்நாடக முதல்வரை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடனான சந்திப்பின்போது தமிழகத்தின் தேவை பேசவுள்ளதாக கமல் தெரிவித்ததாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்)

படத்தின் காப்புரிமை Getty Images

"திமுக எங்களது எதிரணி; எதிரியல்ல" என்று ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அதிமுகவையும், கட்சியின் சின்னத்தையும் மீட்பதே தனது முக்கிய குறிக்கோள் என்றும், சட்டமன்ற நிகழ்வுகளில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பங்கேற்பது அவசியமானது என்றும் அவர் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை PRDBIHAR.GOV.IN

பீகாரில் 2005ஆம் ஆண்டு எருமை மாட்டை திருடியதாக தன் மீது போலீசில் புகாரளித்த ஒருவரை, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேரை தீவைத்து கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜகத் ராய் என்பவரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இது ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்ற கொண்ட பின்னர் அவர் நிராகரித்த முதல் கருணை மனு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் மற்றும் கடன் மோசடிகளால் வங்கித்துறைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு நிலவரப்படி அரசு வங்கிகளில் ரூ.7.77 லட்சம் கோடி அளவுக்கு வராக்கடன்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள நிலையில் இன்று வராக்கடன் மற்றும் மோசடிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், இன்றைய விசாரணையில் கலந்து கொள்வார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: