சேலம்-சென்னை 8 வழிச் சாலை: விவசாயிகள் கூட்டமாக வந்து ஆட்சேபனை

சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து விவசாயிகள் கூட்டம் கூட்டமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்றனர்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை

மத்திய அரசின் நிதியில் 10ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சேலம் முதல் சென்னை வரை 8 வழி பசுமை சாலை அமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

274 கிலோமீட்டர் தொலைவு கொண்டதான சாலை அமைய இருக்கும் இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 கிலோமீட்டர் தொலைவு நிலம் கையகப்படுத்தப் பட்டுவருகிறது.

காணொளிக் குறிப்பு,

சேலம்-சென்னை 8 வழிச் சாலை: கூட்டமாக வந்து ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகள்

இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்கள் தங்களது ஆட்சேபனையை பதிவு செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதற்கு இந்த மாதம் 14ம் தேதிவரை காலக்கெடு வழங்கியிருந்தது. இந்தநிலையில் இன்றோடு காலக்கெடு முடிவடைய உள்ளதால் இன்றைய தினம் ஏராளமான விவசாயிகள் தங்களது ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

"பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?" (காணொளி)

காணொளிக் குறிப்பு,

“பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?”

இதற்காக தனி வட்டாட்சியர்கள் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர். விவசாயிகளும் எழுத்துபூர்வமாக தங்களது கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.

உத்தமசோழபுரம், வீரபாண்டி, நெய்காரப்பட்டி, எருமாபாளையம், அயோத்தியாபட்டிணம், குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கூட்டம் கூட்டமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவண்ணமிருந்தனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து பசுமை சாலை யாருக்காக அமைக்கப்பட உள்ளது என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்த திட்டத்திற்காக தங்களது விவசாய நிலங்களை கையகபப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும், அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகையை கொண்டு வீட்டுமனையைகூட வாங்கமுடியாது என்றும், இதன் மூலம் விவசாயத்தை நம்பியுள்ள தாங்கள் அழியும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஏற்கனவே 4 வழிச்சாலை, ரயில் வழிச்சாலை, ஆகாய வழி என்று இருக்கும்போது மேலும் ஒரு சாலை தேவையில்லாதது என்றும், ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுபடுத்தினாலே போதுமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆட்சேபனை தெரிவிக்க வரும் விவசாயிகள் முழுமையான சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பசுமைவழி சாலைத் திட்டம் - சேலம் மக்கள் கடும் எதிர்ப்பு

காணொளிக் குறிப்பு,

பசுமைவழி சாலைத் திட்டம் - சேலம் மக்கள் கடும் எதிர்ப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :