நாளிதழ்களில் இன்று: ராமநாதபுரத்தில் உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு

  • 25 ஜூன் 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்): உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல்மின் நிலையத்தை கைவிடக் கோரியும், அதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரியும் அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டால், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கடல் வளமும் அழிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கிராம மக்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தினமணி: எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவுவதற்காக 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு காத்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பல்வேறு சட்டவிரோத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது திட்டங்களை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ லெஃப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. பத் கூறியதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர்: ஆளுநர் பணிக்கு இடையூறு செய்தால் 7 ஆண்டு சிறை

படத்தின் காப்புரிமை TWITTER@MK STALIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுக்க நடத்தி வரும் ஆய்வுப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி வரும் நிலையில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ன் கீழ் ஆளுநர் மாளிகை பாதுகாப்பட்டது.

ஆளுநரின் சட்ட அதிகாரங்களுக்கும், பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் நோக்கில் யாராவது செயல்பட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :