ஒடிஷா பெண் புலிகளைக் காதலிக்கச் செல்லும் மத்தியப் பிரதேச 'மன்மதன்'

புலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சரணாலயத்தில் இருந்து, 195 கிலோ எடைக் கொண்ட ஆண் புலி ஒன்று, 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரிசாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஐந்து யானைகள் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் மூன்றே வயதான, அங்குள்ள அதிகாரிகளால் எம்பி2 என்று அழைக்கப்பட்ட புலி, கன்ஹா தேசிய பூங்காவில் இருந்தது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த அறிவிக்கப்பட்ட திட்டத்திற்காக, முதல் முறையாக இப்புலி ஜுன் 20ஆம் தேதியன்று இடமாற்றம் செய்யப்பட்டது.

இது போன்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று வனத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரிசாவில் உள்ள சட்கோசியா புலிகள் காப்பகத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 5 ஆண் புலிகளை அனுப்ப வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் எம்பி2.

"சட்கோசியாவில் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இத்திட்டத்திற்கான நோக்கத்தை எம்பி2 நிறைவேற்றும் என்று நம்புவதாக" வனத்துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரிசாவின் சட்கோசியா காப்பகத்தில் இரண்டு பெண் புலிகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு ஆண் புலி கூட அங்கு இல்லை.

"அங்கு இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதனால் ஆண் புலி தேவைப்படுகிறது" என்று மத்திய பிரதேசத்தில் வனத்துறையின் தலைமை நிர்வாகி சஞ்சய் ஷுக்லா பிபிசியிடம் தெரிவித்தார்.

எம்பி2 புலியை பிடிப்பது பெரும் சவாலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தூரத்தில் இருந்து அப்புலி மீது மயக்க ஊசி எரியப்பட்டது. பின்னர், இதற்காக பிரத்யேகமான தயாரிக்கப்பட்ட டிரக்கில் கொண்டு செல்லப்பட்டது.

ஜூன் 21ஆம் தேதி மதியம் சட்கோசியாவிற்கு எம்பி2 புலி போய் சேர்ந்தது.

அச்சூழலுக்கு இந்த புலி பழகிவிட்டதற்கு பிறகு காட்டுக்குள் விடப்படும். அதன் பிறகே, மீதம் 5 புலிகள் அங்கு கொண்டு செல்லப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்