எட்டு வழிச்சாலை திட்டம்:  எல்லைக் கல்லை பிடுங்கி எறிந்து, அழுது புரண்ட மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எட்டு வழிச்சாலை நில அளவீடு: அழுது புரண்ட பெண், கல்லைப் பிடுங்கி வீசிய விவசாயி

  • 25 ஜூன் 2018

சேலத்தில் பசுமை சாலைக்காக கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த நிலம் அளவீட்டு பணி இன்றுடன் முடிவடைந்தது.

பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் எடுப்பு பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.

சேலம் மெயின் வட்டத்தில் 11 கிராமங்கள், சேலம் தெற்கு வட்டத்தில் 4 கிராமங்கள், வாழப்பாடி வட்டத்தில் 5 கிராமங்கள் என மொத்தம் 20 கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 186.00 ஹெக்டேர் தனியார் நிலங்களும், 46.00 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களும் 16.00 ஹெக்டேர் வனப்பகுதி உட்பட்ட காப்பு காடு பகுதிகளும் என மொத்தம் 248.00 ஹெக்டேர் நிலம் அளவீடு செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு வந்தன.

277.3 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை சேலம் மாவட்டத்தில் மட்டும் 36 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது.

இதற்காக கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த நிலம் அளவீடு செய்யும் பணி இன்று முடிவடைந்தது. இன்றைய தினம் பூலாவரி, புஞ்சைகாடு பகுதியில் அளவீடு செய்யப்பட்டு சேலம் - கோவை தேசிய நான்கு வழிச்சாலையில் உத்தமசோழபுரம் பகுதியில் இப்பணி முடிவடைந்தது.

உத்தமசோழபுரம் பகுதியில் அளவீடு செய்யும்போது அங்குள்ள விவசாயிகள், தங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்காமல் தங்களு நிலத்தில் அளவீடு செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போலீசாரும், வருவாய்த் துறையினரும் அந்த விவசாயிகளை சமாதானப்பட்டுத்தி அப்பகுதியில் நிலத்தை அளவீடு செய்து முடித்தனர்.இதன் பிறகு அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் உள்ள மரங்கள், கிணறுகள், வீடு மற்றும் மாட்டு பட்டிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரவிக்கப்பட்டது.

நிலம் பறிபோகும் என்ற சோகத்தில், ஆற்றாது அழுது புரளும் ஒரு பெண். அப்போதுதான் நட்ட கல்லை பிடுங்கி எறியும் விவசாயி.... இந்தக் காணொளியில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :