'பெண்களுக்கு ஆபத்து' - இந்தியா மீது அவதூறா? நிதர்சனமா? #வாதம்விவாதம்

  • 28 ஜூன் 2018

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தத் தகவல் சரியானதா, மிகைப்படுத்தப்பட்டதா? என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"இங்கே அதிகார வர்க்கங்களின் அட்டூழியங்களே அதிகம். பெண்களுக்கு இவர்கள் இழைக்கும் கொடுமைகளுக்கு சரியான தண்டனைகளும் கிடைப்பதில்லை. அவர்களின் காட்டுத்தனமான சுதந்திர போக்கு தவறான மனநிலை கொண்ட சாமானியனுக்கும் துணிச்சல் வர வைத்துவிடுகிறது. முதலில் தவறுகளுக்கு தக்க தண்டனை தாமதமின்றி கிடைக்கவேண்டும். மேலும் சமூகவலைதளங்களில் பரவும் ஆபாச வெப்சட்டுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு தன் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு அதிகப்படுத்த வேண்டும். ஆய்வுத் தகவல் முற்றிலும் சரியே," என்கிறார் நித்யா பாலகிருஷ்ணன்.

"இதை இந்தியாவை இழிவு படுத்த மேலை நாடுகள் வெளியிட்ட பொய்யான செய்தியாகவே கருதுகிறேன்...இனி அடுத்த தேர்தல் வரும்வரை இது போன்ற பொய்யான செய்திகள் தொடர்ந்து வரும்," என்று சரவணன் கூறியுள்ளார்.

"இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட தனியாக நடந்து சென்றார்கள். ஆனால் இப்போது பாவ மன்னிப்பு கூட கேட்க முடிவதில்லை," என்று கணேஷ் ராமச்சந்திரன் எனும் ஃபேஸ்புக் நேயர் தெரிவித்துள்ளார்.

"முன்பைவிட குறிப்பாக தலித் மற்றும் சிறுபான்மை சமூகப் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. ஆனால் உலகளவில் என்பது கேள்விக்குறியது," என்கிறார் சதீஷ் குமார்.

"மிகைப்படுத்தப்பட்டது தான் இந்த அறிக்கை. இது போன்ற போலியான அறிவிப்புகள் யார் வேண்டுமானாலும் சிலரிடம் கருத்து கேட்பு நடத்தி வெளியிட முடியும். முழுவதும் உண்மை இல்லை," என்று ராஜிவ் எனும் நேயர் கூறியுள்ளார்.

"இந்தியா மீது அவதூறு பரப்படுக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலும் பாலியல் சம்மந்தப்பட்ட குற்றங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்படுக்கிறது மேலும் அதன் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் பிற நாடுகள் அவ்வாறு செய்வதில்லை," என்கிறார் பார்த்தசாரதி எனும் ட்விட்டர் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்