மும்பை: கட்டுமான வேலை நடந்து வந்த கட்டடத்தின் மீது மோதிய தனியார் விமானம் - 5 பேர் பலி

  • 28 ஜூன் 2018
மும்பையில் தனியார் விமானம் மோதி விபத்து

மும்பையில் உள்ள கட்கோபர் பகுதியில் தனியார் விமானம் ஒன்று கட்டட வேலை நடந்து கொண்டிருந்த கட்டடம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

படத்தின் காப்புரிமை Rahul Ransubhe

ஐந்து பேர் இறந்துள்ளார்கள் என தீயணைப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு விமான ஓட்டுநர், இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு வழிப்போக்கர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய உத்தரபிரதேச மாநில கூடுதல் டிஜிபி ஆனந்த் குமார், "விபத்துக்குள்ளானது உத்தரபிரதேச விமானம் அல்ல என்று விமான போக்குவரத்துத்துறை இயக்குநர் கூறியுள்ளார். ஒரு தனி நபருக்கு உபி அரசு விமானத்தை விற்றுள்ளது. இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை" என்றார்.

படத்தின் காப்புரிமை Rahul Ransubhe

முன்னதாக சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய மும்பை நகர தலைமை தீயணைப்பு அதிகாரி பிரபத் ரஹன்கட்லே, 12 நபர்கள் பயணிக்கக்கூடிய டைப் சி-90 ரக தனியார் விமானம், கட்டுமானத்தில் இருந்த கட்டடம் மீது மோதியதாக கூறினார். அதில் 4 நபர்கள் இருந்ததாக சந்தேகப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதில் ஒருவர் விமானி மற்றும் மற்ற 3 நபர்களில், இரண்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரபத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Rahul Ransubhe
படத்தின் காப்புரிமை AMITSHAH
Image caption விமானம் கிளம்புவதற்கு முன்னர் சூடம் ஏற்றிய புகைப்படம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :