'விபத்துக்குள்ளான மும்பை விமானத்தை விதிகளை மீறி பறக்க அனுமதித்தது யார்?' இறந்த விமானியின் கணவர் கேள்வி

  • 29 ஜூன் 2018

மும்பையில் உள்ள கட்கோபர் பகுதியில் வியாழக்கிழமையன்று தனியார் விமானம் ஒன்று கட்டட வேலை நடந்து கொண்டிருந்த கட்டடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேப்டன் மரியா ஜூபேரி உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்

படத்தின் காப்புரிமை AMITSHAH
Image caption விமானம் கிளம்புவதற்கு முன்னர் சூடம் ஏற்றிய புகைப்படம்

''ஜூன் 28-ம் தேதி காலை வேளையில் வழக்கமாக மற்ற நாள்களில் இருப்பதுபோல சிரித்த முகத்துடன் இருந்தார் என் மனைவி . பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி90 எனும் குட்டி விமானம் சோதனை ஓட்டத்தினை மேற்கொள்ள ஏதுவான வானிலை இல்லை என்பதால் கூடுமானவரை வீட்டுக்கு விரைவில் திரும்பிவிடுவேன் என உறுதியளித்துவிட்டு அவர் வீட்டை விட்டுச் சென்றார்.

அப்போது விமானத்தின் கேப்டன் ராஜ்புட்டும் மரியாவின் கருத்தை ஆமோதித்திருந்தார். ஆகவே சோதனை விமானம் அன்றைய தினம் பறக்காது என நான் உறுதியாக இருந்தேன். ஏனெனில் வானிலை நிச்சயமாக பறப்பதற்கேற்ற வகையில் சரியாக இல்லை. '' என்கிறார் மும்பையில் நேற்று குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இறந்த மரியா ஜூபேரியின் கணவர்.

''இக்குட்டிவிமானம் அதன் உச்சநேரத்தில் சிறப்பாக செயல்பட்டதை நாங்கள் அறிவோம். எங்களுக்கு இந்த விமானம் 20 வருடங்கள் பழையது என்பதும் தெரியும் மேலும் 2009-ல் இது விபத்துக்குள்ளானதையும் அறிவோம்.

உத்தரப்பிரதச அரசு இதனை பழுது பார்ப்பதற்கு பதிலாக விற்பதற்கு முடிவெடுத்தது. மேற்கண்ட உண்மைகள் அனைத்தையும் கணக்கில் கொள்ளும்போது மரியா ஜூபேரியின் மரணத்துக்கு யார் பொறுப்பு? துல்லியமாக யார் மீது தவறு என நாங்கள் அறிய விரும்புகிறோம்.

படத்தின் காப்புரிமை Rahul Ransubhe

விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் இன்டீமர் எனும் நிறுவனம் ஈடுபட்டது. விமானம் மோதி விபத்துக்குளாகும் வகையில் தொழில்நுட்ப கோளாறுகளை கண்டறியும் திறன் இல்லாத ஒன்றாக அந்நிறுவனம் தெரிகிறது. இன்டீமரின் தொழில்நுட்ப குழுவுக்கு விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்களை அறியும் திறன் இருக்கிறதா இல்லையா அல்லது தரையில் இருந்து அந்த விமானத்தை இயக்குவதற்கு முன்னால் எடுத்துக்கொள்ள வேண்டிய சிரத்தைகளுக்கான தேவைகளை விட லாப நோக்கங்கள் மேலோங்கிவிட்டனவா என அறிய விரும்புகிறோம்.

யுவி ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான உரிமையாளர்கள் இது போன்ற விமானங்கள் பறக்க தகுதியானதா என சோதிக்கவேண்டிய தங்களது கடமையை அலட்சியம் செய்துவிட்டனரா?

விமானம் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரியும்நிலையில் சோதனை ஓட்டத்துக்காக இன்டீமருக்கு ஏதேனும் அழுத்தகங்களை அவர்கள் கொடுத்தார்களா எனத் தெரிந்து கொள்ள விரும்பிகிறோம்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

''உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளின் படி மழை வேளையில் சிறு விமானங்கள் சோதனை ஓட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. பிறகு எப்படி விமானம் பறந்தது? இயக்குநகரம் குற்றத்துக்கு காரணமா? விதிகளை மீறி இயக்குநரகத்துக்குள் இருக்கும் அதிகாரிகள் அனுமதி அளித்தார்களா?

இயக்குநரக தரப்பில் இருந்து சோதனை விமானத்துக்கு அனுமதி அளித்தது யார் என அறிய விரும்புகிறோம்.

எந்த அல்லது எத்தனை நிறுவனங்களின் தவறு இது? அவர்களின் லாப நோக்கததுக்காக நாங்கள் ஏன் எங்களது அன்புக்குரியவர்களை இழக்க வேண்டும்? யார் சோதனை விமானம் பறப்பதற்கு அழுத்தம் தந்தது?

நாங்கள் அதிரிச்சியில் இருக்கிறோம். கேடு விளைவித்த இந்த விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்ப உறவுகளும் அதிர்ச்சியில் இருக்கின்றன. இது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு வார்த்தை, ஒரு குறுஞ்செய்தி ஏதாவதொன்று இந்த நிறுவனங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் இதுவரை அரசு கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இந்த அறிக்கையை எழுதும் நேரம் வரை ஒரு வார்த்தையும் வரவில்லை. சகிப்புத்தன்மையற்ற வகையில் எங்களை நடத்துவதற்கு அவர்களை தூண்டியிருப்பது என்னவென்பது எங்கள் புரிதலுக்கு அப்பால் உள்ளது'' அந்த அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் மரியா ஜூபேரியின் கணவர் பிரபத் கதுரியா மற்றும் மரியாவின் குடும்பம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: