காவிரி ஆணைய முதல் கூட்டத்தில் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு தீர்வு - பழனிசாமி நம்பிக்கை

  • 30 ஜூன் 2018

ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்,

மேலும், டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பழனிசாமி சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை நலத்திட்டங்கள் வழங்கியதை தொடர்ந்து, ரூ 17.5 கோடி மதிப்பிலான புறவழிச்சாலையை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்யும் என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமோ, அந்த அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஜூலை 2-ஆம் தேதி கூடுகின்ற ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் கிடைக்க மத்திய அரசு முழு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்புவதாக கூறினார்.

மழையின் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொள்ளளவை எட்டியுள்ளது. இனி அங்கு தண்ணீரை தடுக்க இயலாது.

ஏற்கனவே 22 ஆயிரம் அடி கனநீர் திறந்து விடப்பட்டுள்ளது. 22 ஆயிரம் டி எம் சி க்கு மேல் நீர் உள்ளது, இருப்பினும் 90 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையைத் திறக்க இயலும்.

எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக, குறுவை சாகுபடி தொகுப்பு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுகீடு செய்யப்பட்டு நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடிக்கான வேலையை துவங்கிவிட்டனர். இதன் மூலம் தமிழகத்தில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக தற்போது மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறுவை சாகுபடிக்கும், தானிய பயிர் சாகுபடிக்கும், விவசாயிகள் பாதிக்காத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதற்காக எட்டுவழிச்சாலை? முதல்வர் பழனிசாமி விளக்கம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஒருங்கிணைந்த வளர்ச்சி்க்காக சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை - பழனிசாமி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :