ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போன 'அமித் ஷாவே திரும்பிப் போ'!

ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போன 'அமித் ஷாவே திரும்பிப் போ'! படத்தின் காப்புரிமை Getty Images

பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்துள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இணையத்தில் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது. இந்நிலையில், தற்போது அந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் சென்னை அளவில் கூட டிரெண்டிங் பட்டியலில் இடம்பெறவில்லை.

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று சென்னையில் நடைபெறவுள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் அவர். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை வருவதால் விமான நிலையத்தில் அமித் ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர். ஆனால், இணையத்திலோ, அவருக்கு வரவேற்பு வேறு விதமாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Amit Shah

கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி, பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியின் தமிழக வருகையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதனால் சென்னையே ஸ்தம்பித்து போனது.

ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோதிக்கு இருந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டாலும் இணையத்தில் மோதிக்கு செய்தது போன்றே இணையவாசிகள் அமித் ஷாவுக்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை பரப்பிவிட அது வைரலானது.

அமித் ஷா குறித்த கேலி மீம்கள் வழக்கம்போல் ட்விட்டரில் அனல் பறக்க, இன்று மதியம் சென்னை வந்தார் அவர்.

இச்சூழலில், சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடிரென காணவில்லை. ஆனால், அந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக, ட்விட்டரில் வைரலாகும் சில மீம்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை @Jaisanjeevi
படத்தின் காப்புரிமை Sps Saravanan Alanganallur
படத்தின் காப்புரிமை Rocky
படத்தின் காப்புரிமை Manoharan Karthik

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: