வாதம் விவாதம்: ''ஆட்சி செய்பவர்கள் தமிழ் நாட்டை வீதியில்தான் நிறுத்தி வைத்துள்ளார்கள்''

தமிழகம் படத்தின் காப்புரிமை Getty Images

தொழில் செய்ய உகந்த இந்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு 15வது இடம். அரசியல், ஊழல் காரணமா அல்லது நிர்வாகத் திறமையின்மையா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

''வருகின்ற தொழில் நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டால் யார் வருவார்?'' என ரமேஷ் கேட்டுள்ளார்.

''ஊழலும்,நிர்வாக திறமையின்மையும் தான் காரணம். தொழில்தொடங்க அனைத்து அதிகார மட்டங்களிலும் நன்கொடைகளை வாரி இரைக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கடந்த கால ஆட்சியாளர்களின் திறமையின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி தந்தவர்கள் அது தடையில்லாமல் இயங்கத் தேவையான மின்சாரத்தினை உற்பத்தி செய்ய தொலைநோக்கு பார்வையுடன் மின்திட்டங்களை செயல்படுத்தவில்லை. மின்வெட்டு காரணமாக ஏராளமான சிறுகுறு தொழிற்சாலைகள் செயல்படாமல் போனது. '' என்கிறார் முத்து செல்வம்.

''ஊழலும், நிர்வாக திறமையின்மையும்தான் முக்கிய காரணம். ஜெயலலிதா தமிழ் நாட்டை இந்தியாவிலேயே முதலிடத்தில் நிறுத்துவேன் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவரும் இப்போது ஆட்சி செய்பவர்களும் தமிழ் நாட்டை வீதியில்தான் நிறுத்தி வைத்துள்ளார்கள்`` என கருத்து தெரிவித்துள்ளார் சரேஜா பாலசுப்ரமணியன்.

''தொழில் தொடங்க கேட்கும் கமிஷனைப் பார்த்தே அடுத்த மாநிலத்திற்கு ஓடிப் போகிறார்கள். இப்படியே போனால் மக்கள் வசிக்க உகந்த இடமாகத் தமிழகம் இருக்குமா என்பதே சந்தேகம். கண்டிப்பாகக் காரணம் ஊழலே... ஊழலே... ஊழலே'' என்கிறார் சுப்பு லட்சுமி.

``ஊழல் ஊழல் ஊழல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்`` என்பது சிவசர்மாவின் கருத்து.

``ஆட்சியாளர் செய்யும் ஊழல்தான் காரணம்`` என்கிறார் ஸ்ரீனிவாசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :