"பாஜகவிற்கு இந்துத்துவாவே பலம், அதுவே பலவீனம்"

படத்தின் காப்புரிமை DILIP SHARMA/BBC

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆகிவிடும் என்று காங்கிரஸ் கட்சியின் சசி தரூரின் கருத்து உண்மை நிலையை பிரதிபலிக்கிறதா அல்லது அரசியல் எதிரி மீதான வழக்கமான தாக்குதலா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

"காங்கிரஸ்கார்களுக்கு குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதில் அதிக விருப்பம் இருக்கும் போல. சசிதரூர் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுப்போன்ற பேச்சுகள் அவரின் அரசியல் இருப்பை காட்டுமே தவிர, காங்கிரஸ் வெற்றி பெற இது உதவாது. மோடி அரசின் ஒரு ஊழல் குற்றசாட்டு கூட நான்கு ஆண்டுகள் வரை கூற முடியவில்லை. அதை கண்டுபிடிக்க முடிந்தால் எதிர்க்கட்சியாக காங்கிரஸ்க்கு வாய்ப்புண்டு" என்று பதிவிட்டுள்ளார் நெல்லை முத்துச்செல்வன் என்ற நேயர்.

"அவர்கள் கட்சியே மதவாத அடிப்படையில்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அது பல்வேறு நிகழ்வுகள் மூலம் வெளிப்படுகிறது. தமிழ் நாட்டில் தாமரை மலர செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சியும் அதுதான். மதவாதம் என்பது பின்வாசல் வழியாக வரும் முறையாகும். அது எதிர்மறையாகவும் போகலாம்" என்று கூறியுள்ளார் சுப்பு லட்சுமி.

"மதவெறி தாக்குதல், பசு வதை தாக்குதல், சிறுபான்மையினரின் மீது தாக்குதல், இந்துத்வா வெறி இவற்றையெல்லாம் பாஜக விடவில்லையென்றால், இந்து தீவிரவாதத்திற்கு வித்திடும். பாஜகவிற்கு இந்துத்வாவே பலம், இந்துத்வாவே பலவீனம்" என்று கருத்து பதிவிட்டுள்ளார் சரோஜா சுப்ரமணியம்.

"இந்தியா ஜனநாயகத்தில் பாஸிசம் புகுந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பெண்கள் மீதுள்ள வன்முறை மத வன்முறை ஜாதிய அடக்குமுறை அதிகரித்துள்ளதுதான் சாட்சி" என்று கூறியுள்ளார் முகமது அக்பர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :