சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: ரஜினியின் கருத்து ஏற்புடையதா?

சேலம் எட்டுவழிச்சாலையால் தொழில் வளர்ச்சி,வேலை வாய்ப்புகள் பெருகும். அதே சமயம், நிலம் போனவர்களுக்கு நிலமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் மகிழும் வண்ணம் இழப்பீடும் வழங்கவேண்டும் எனும் ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடையதா? என்று நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

நிச்சயமாக இல்லை. உன் தூக்கத்தை கொடு நாங்கள் மெத்தை தருகிறோம் என்பது போன்று உள்ளது. சரி இவர் சொன்னது போன்று நிலம் தருவார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒரு ஏக்கர் நிலம் மரங்கள் நிறைந்து உள்ளது என்று வைத்துக்கொண்டால் அதற்கு இழப்பீடாக அரசிடம் இருந்து இவர் அதேபோல் நிலத்தை இவர் பெற்றுத் தர இயலுமா...? இல்லை அரசாங்கத்தால் இது முடியுமா சொல்லுங்கள் பார்ப்போம் என்று கேள்வி எழுப்புகிறார் மு.மோகன சுந்தரம்.

ரஜினி ஒரு சூழ்நிலை கைதி. அவரால் கூறப்படும் கருத்துக்கள் யாவும் அவருடைய கருத்துக்களே அல்ல என்பதுதான் அப்பட்டமான உண்மை. விதி வலியது என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

இந்த கருத்து நிலத்தின் உரிமையாளர்களின் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்கிறார் பாலுமகேந்திரா.

ஆர்கிட்டன் ராஜுவடன் ரஜினியின் கருத்தை வரவேற்கிறார். இது நேர்மறையான சிந்தனை என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

NH44 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3650 கி.மீ போட்டாங்க அதனால இந்தியாவோட விவசாயம் அழிஞ்சிபோச்சா? என்று கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்