மாற்றுத்திறனாளிகள் 'டேட்டிங்' செய்ய புதிய செயலி

இந்தியாவில் பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இருந்தும், அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் "வெளிப்படாதவர்களாகவே" அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு டேட்டிங் வாய்பபை உருவாக்கும் செயலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இன்குளோவ் - மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் டேட்டிங் வாய்ப்பு வழங்க உருவாக்கப்பட்ட ஆப் (செல்பேசி செயலி)

மாற்றுத்திறானாளிகளுக்கு இடையே டேட்டிங் வாய்ப்புகளை வழங்குகின்ற 'இன்குளோவ்' என்கிற ஆப் செயலியை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருவோரை சந்தித்தார் பிபிசியின் ஆயிஷா பெரேரா.

உண்மை சொல்ல வேண்டுமென்றால் எத்தனை பேருக்கு மது வேண்டும்?

இதனை கேட்டவுடன், இந்தியாவின் தலைநகரான டெல்லியிலுள்ள உயர் வகுப்பு இரவு விடுதியான கிற்றி சு-வில் கூடியிருந்த மாற்றுத்திறனாளிகள் ஒருவித கூச்சத்துடன் நகைத்தனர்.

அங்கு பாலிவுட் மற்றும் ஆங்கில பாப் இசை இசைக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கே இயன்ற வகையில் தரையில் நடனம் ஆட தொடங்குகின்றனர்.

உடல் அளவில் குறைபாடுகள் உதுவும் இல்லாத பலர் இந்த தளத்தில் இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இடையில் ஜோடிகளை உருவாக்கும் வாய்ப்புக்களை வழங்கும் இன்குளோவின் தன்னார்வ முயற்சிதான் இந்த சந்திப்பு.

கிற்றி சு-வில் கூடியிருந்த பலருக்கும் இரவு விடுதியில் சந்திப்பது அவர்களின் முதல் அனுபவமாக அமைந்தது.

பட மூலாதாரம், INCLOV

படக்குறிப்பு,

ஒரு குவளை காப்பி வாங்கி குடிப்பது கூட கடினமாக இருப்பதால், இந்தியாவின் மாற்றுத்திறனாளிகள் தங்கள் சமூக வாழ்க்கையை வரையறுத்து குறைத்து கொள்கின்றனர்.

"கொல்கத்தாவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக ஒருமுறை எனது நண்பர்களோடு வெளியே செல்ல முயற்சித்தேன். என்னுடைய சக்கர நாற்காலியால் பிற விருந்தினருக்கு வசதியின்றி போகும் என்று என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று 34 வயதான மனிஷ் ராஜ் கூறுகிறார்.

ஆனால், இது மாதிரியான ஏழு, எட்டு சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டது அதிக வசதியான சூழலை ஏற்படுத்தியது என்று அவர் கூறுகிறார்.

"மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் இந்தியர் பலரும் தாங்கள் குழந்தைகளாக இருக்கின்றபோதே தங்களின் சமூக வாழ்க்கையை குறைத்து வரையறுத்து விடுகின்றனர். வெளியே சென்று செயல்பட அவர் விரும்பவில்லை என்பதால் அல்ல இந்த வரையறை. ஒரு குவளை காப்பி வாங்கி குடிப்பது கூட அவர்களுக்கு கடினமாக இருப்பதுதான் இதற்கு காரணமாகும்" என்கிறார் தன்னுடைய கல்லூரி நண்பரான கல்யாணி கோனாவுடன் இணைந்து இன்குளோவை நிறுவிய சங்கர் ஸ்ரீநிவாசன்.

உள்கட்டுமானங்கள், மனப்பான்மை மற்றும் கொள்கையை பொறுத்தமட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நிலைமை இந்தியாவில் இல்லை.

உடல் ரீதியான குறைபாடுகள் இருப்பது சமூகத்தில் களங்கம் மற்றும் அவமானம் என்று பார்க்கப்படுவதால், பல குடும்பங்கள் இத்தகைய குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதில்லை.

இவ்வாறு "வெளிப்படாமல் இருப்பது" என்பது மாற்றுத்திறனாளிகள் பொது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவர்கள் தனாகவே கருதப்படுவதில்லை என்பதை குறிக்கிறது.

படக்குறிப்பு,

சக்கர நாற்காலி பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால், மதுவகத்தை விட்டு சென்றுவிட மனிஷ் ராஜிடம் கூறியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளோடு தொடர்பாடல் கொள்ளவும், அவர்களையும் நீரோட்டத்தோடு சேர்த்து கொள்ளவும் போராடுபவர்கள் பல நேரங்களில் கடைசியாக ஒதுங்கிவிடும் நிலைதான் ஏற்படுகிறது.

சங்கர் மற்றும் கல்யாணியும் இணைந்து இன்குளோவை தொடங்குகினர். மாற்றுத்திறனாளிகளுக்கு இடையில் ஜோடிகளை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இத்தகைய வசதியை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவது தொடர்பாக யாரும் எண்ணி பார்க்கவில்லை என்று விரைவில் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

"ஒன்டட்டு அம்பிரல்லா" என்ற ஆஃப்லைன் நிறுவனமாக தொடங்கிய இவர்களது முயற்சி இணையதளமாக பரிணமித்து பின்னர் செல்பேசி ஆப் -பாக உருவாகியுள்ளது.

"இந்தியாவில் மட்டும் 800 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில் அவர்களை தொழில்நுட்பம் மூலம்தான் வளர்ச்சியடை செய்ய முடியும் என்கிறார் ஸ்ரீநிவாசன்.

ஆனால், எந்தவித தொழில்நுட்ப நிபுணரும், பணமும் இல்லாமல் மக்களிடம் நிதி வசூலித்து ஒரு ஆப் உருவாக்குவோரை பணிக்கு அமர்த்துவதற்கு 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதியை அவர்கள் உருவாக்கினர்.

அதன் பின்னர், இத்தகைய ஆப்-பில் இருந்து மாற்றுத்திறனாளிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள பல மாற்றுத்திறனாளிகளிடம் பரவலாக பேட்டி கண்டனர்.

பட மூலாதாரம், INCLOV

படக்குறிப்பு,

மக்களை நேரடியாக சந்திப்பதற்கு பாதுகாப்பான சூழலை இன்குளோவ் வழங்கியுள்ளது.

சரி பார்க்கப்பட்ட 100 பேரின் சுயவிபரங்களோடு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய பின்னர் இந்த செயலியில் சேருகின்ற சமூகத்தின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

உடனடியாக விநோதமான ஒன்றை காணவந்ததாக குறிப்பிடுகிறார் ஸ்ரீநிவாசன்.

ஆன்லைனில் மாற்றுத்திறனாளிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பை உருவாக்கி கொண்டாலும், செய்தி தளங்களான வாட்ஸ்அப் போன்றவற்றில் நடைபெறும் உரையாடல்கள் நேர்முக சந்திப்பாக உருவாவதில்லை என்பதை உணர வந்ததாக அவர் கூறினார்.

"இதில் பல வெளிப்புற அம்சங்கள் இருப்பதை நாங்கள் அறிய வந்தோம். பாதுகாப்பு வெளிப்படையாக தெரிகின்ற ஒரு பிரச்சனைதான். மேலும், உள்கட்டுமான வசதிகள், மொழிபெயர்ப்பாளர்கள், சமூக களங்கம் என பிற சிக்கல்களும் இருந்தன" என்கிறார் ஸ்ரீநிவாசன்.

அப்போதுதான் இந்த செயலில் பதிவு செய்துள்ளோர் ஒருவரோடு ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளுவதற்கான வாய்ப்பை வழங்க இன்குளோவ் முடிவு செய்தது.

டெல்லியின் புறநகரான குருகிராமிலுள்ள உணவகத்தில் நடைபெற்ற முதல் சந்திப்பில் 5 பேர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, ஜெய்பூர் உள்பட இந்தியா முழுவதுமுள்ள நகரங்களில் 50 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், INCLOV

படக்குறிப்பு,

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சிற்றி சு-வில் நடைபெற்ற கடைசி நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுகள் மூலம் பிறரை நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றோம். அடுத்த முறை இவர்கள் வெளியே செல்ல விரும்பினால், எந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென அவர்களுக்கே தெரிந்துவிடும். அதற்காக எப்போதும் இன்குளோவின் உதவ வேண்டிய அவசியம் இருக்காது என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் வேறுபட்டவை. ஹோட்டல்கள், உணவகங்கள், கடற்கரைகள், நகைச்சுவை மனமகிழ் மன்றங்கள் மற்றும் கரோக்கி மதுவகங்கள் என பல்வேறுப்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவசியமான கட்டுமானங்களை அமைக்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கியுள்ளதாக இந்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, லலித் ஹோட்டலிலுள்ள கிற்றி சு இரவு விடுதி உரிமையாளர்கள், இந்தியாவில் அவர்களுக்குரிய எல்லா இடங்களிலும் சக்கர நாற்காலியோடு தடையின்றி செல்லும் வகையில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதோடு, மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சேவையளிக்கும் பயிற்சியையும் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த மாற்றுத்தினறாளிகள் பலரின் வாழ்க்கையில் இன்குளோவ் மாற்றத்தை வழங்கியுள்ளது.

"இந்த செல்பேசி செயலி மூலம் பல நெருங்கிய நண்பர்களை உருவாக்கியுள்ளதாகவும், இத்தகைய சமூக சந்திப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் 27 வயதான கிர்த்திகா பாலி.

காலால் எழுதி கற்பிக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியை

காணொளிக் குறிப்பு,

காலால் எழுதி கற்பிக்கும் ஆசிரியை

ஆனால், இதே போன்று இன்னும் அதிகமான செயல்பாடுகளை இன்குளோவ் நிறைவேற்ற முடியும் என பிறர் கூறுகிறார்கள்.

இத்தகைய சமூக ஊடாடல்கள் மிகவும் சிறந்தவை என்று கூறுகின்ற 26 வயதான ஷரே மார்வா, இந்த சமூகத்தை திரட்டி, மாற்றுத்திறனாளிகள் சந்திக்கின்ற பல பிரச்சனைகளை சமாளிக்க அதிக செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். வருமானம் குறைவாக இருக்கின்ற சமூகங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் இதனை பயன்படுத்தும் படியாக இந்த செயலி இல்லை என்கிறார்.

"தற்போது இருக்கின்ற இன்குளோவின் வடிவம் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளை, சாதாரண மக்களோடு தொடர்பு படுத்துவதாகவும் செயல்பட வேண்டும். நான் நடந்து செல்கிறபோது, வேற்றுக்கிரகவாசி போல என்னை அனைவரும் பார்க்கின்றனர். மாற்றுத்திறனாளிகளை அதிகமாக ஏற்றுகொள்ள செய்வதற்கு இந்த தளத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், ஒட்டுமொத்த தொடர்புகளையும் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு கொள்கை அளவில் அதிகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், இன்குளோவ் சமூக செயற்பாடுகளில் இறங்க விரும்பவில்லை என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்திருக்கிறார்.

"அரசுக்கு எதிராக செல்வதைவிட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்கள் நாங்கள். கடைசியாக பார்த்தால் மக்களின் மனப்பான்மைதான் முக்கியம். எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் பிற செயல்பாடுகள் மூலம் மனப்பான்மைகளை மாற்ற உதவுகிறோம்" என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்திருக்கிறார்.

இந்த பார்வையை ஒப்புக்கொள்வதாக மாற்றுத்திறனாளிகள் உரிமை செயற்பாட்டாளர் நிப்பின் மல்கோத்திரா கூறுகிறார்.

"இந்தியாவில் இதுதான் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வாரு மாற்றுத்திறனாளியும் ஏன் செயற்பாட்டாளராக இருக்க வேண்டும்? சிறுபான்மையினருக்கும் யாரும் எதுவும் செய்யாததால், கடைசியாக செயற்பாட்டாளராக மாறுவதே இந்த நாட்டில் நிலவும் பிரச்சனையாகும். இந்நிலை மாற வேண்டும்" என்று நிப்பின் கூறுகிறார்.

"சில வேளைகளில் காப்பி குடிக்கும்போது யாரையாவது சந்திப்பதையே நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளி நண்பருக்காக, `ஈஸி வாக்கர்` கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்

காணொளிக் குறிப்பு,

நண்பருக்காக நடக்கும் கருவி: தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :