சீதாராம் யெச்சூரி: தலையில் கும்பம் வைத்ததன் பின்னணி என்ன?

மார்க்சிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தலையில் போனத்தை (கும்பம்) வைத்து கொண்டு, ஹைதராபாத்தில் நடந்த ஓர் ஊர்வலத்தில் பவனி வரும் புகைப்படம் ஊடகங்களில் பரவலாக பிரசுரிக்கப்பட்டது. இந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு இருக்கிறது. அதற்கு ஏராளமான பின்னூட்டங்களும் இடப்பட்டு இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Pippala Venkatesh
Image caption சீதாராம் யெச்சூரி

இடதுசாரிகள் தங்களது கட்சியில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமைக்கப்பட்டதுதான் பகுஜன் இடது முன்னணி.

பகுஜன் இடது முன்னணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஒரு மாநாடு நடத்தியது.

தெலுங்கானா மார்க்சிஸ்ட் செயலாளர் தமினெனி வீரபத்ரம் முன் முயற்சியில் அமைக்கப்பட்டதுதான் பகுஜன் இடது முன்னணி. சமூக தளத்தில் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் சில குழுக்களும், வேறு சில கட்சிகளும் இந்த பகுஜன் இடது முன்னணி இடம் பெற்றுள்ளன.

தலித்துகளின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடும் அறிவுஜீவி கான்சாலய்யா இந்த பகுஜன் இடது முன்னணியின் கூட்டங்களில் தென்படுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த தேர்தல் சீர்திருத்தத்திற்கான மாநாட்டில் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். இந்த மாநாட்டு பின்னணியில் நடந்த பேரணியில்தான் யெச்சூரி பத்துகம்மாவுடன் வலம் வந்தார். அவர் மேடைக்கு சென்ற பின் அங்கு கூடி இருந்த ஊடகவியலாளர்கள் சீதாராம் யெச்சூரியிடம் 'போனத்தை' அளித்து புகைப்படத்துக்கு காட்சிதர சொன்னார்கள்.

அவரும் அவர்கள் சொன்னதை செய்தார். பின் மின்னல் வேகத்தில் இதனை புகைப்பட கலைஞர்கள் படம் பிடித்தனர். அந்த புகைப்படமும் வைரலாக பரவியது.

தசரா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் பத்துகம்மா நிகழ்வு பின்னணியில் யெச்சூரியின் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. தலைப்பு செய்திகளிலும் இவ்வாறகவே இடம் பிடித்தன.

எப்படி இடதுசாரிகள் சமய விழாக்களில் கலந்துக் கொள்ளலாம் என்ற கேள்விகள் எழுந்தன.

பத்துகம்மாதிருவிழா

தசராவின் போது பத்துகம்மா திருவிழா தெலுங்கானாவில் கோலாகலமாக நடக்கும். இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கெளரி கடவுளுக்கு சடங்குகள் நடக்கும்.

பத்துகம்மா விழாவின் போது கெளரி கடவுளுக்கு விதவிதமாக உணவு படைப்பார்கள். பெண்கள் பத்துகம்ம்மாவை வணங்கி பாடல் ஆடி நடனம் ஆடுவார்கள். வெற்றிலை பாக்கு, பழங்களை பரிமாறிக் கொள்வார்கள்.

பத்துகம்மா குறித்து நிறைய கதைகள் உள்ளன. பத்துகம்மா கெளரி கடவுளின் இன்னொரு வடிவம் என்றும், சிறு தெய்வம் என்றும், கிராமத்தில் கொள்ளை நோய்கள் பரவிய போது கிராம மக்கள் பத்துகம்மாவை வணங்கினார்கள் என்றுன் பல கதைகள் உலாவுகின்றன.

"ஒரு கிராமத்திதில், இளம்பெண் ஒருவர் நிலவுடமையாளர் ஒருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அந்த பெண் மரணித்துவிட்டார். இது போன்ற கொடுமையால் பாதிக்கப்பட்ட பலர் இறந்த பெண்ணை வணங்கினார்கள். இதிலிருந்தே பத்துகம்மா விழா உயிர் பெற்றது."

அதுபோல, இறந்த பெண் தலித் என்றும் விவரிக்கப்படுகிறது .

படத்தின் காப்புரிமை Pippala Venkatesh

தெலங்கானாவில், மதர்சார்பற்ற, பரந்தமனப்பான்மை உடைய குடும்பங்களும் இந்த பத்துகம்மா திருவிழாவில் கலந்து கொள்கின்றன.

இறை நம்பிக்கையாக இல்லாமல், கலாசாரத்தின் ஒரு பகுதியாக பத்துகம்மாவை பார்க்க வேண்டும் என்ற வாதங்களும் இருக்கின்றன.

திருவிழாக்களும் அரசியலும்

மாநில கட்சிகள் இவ்வாறான திருவிழாக்களை தங்கள் அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றன. இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது எப்படி இடதுசாரிகள், அந்த சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இவ்வாறான தெய்வ வழிப்பாடு திருவிழாக்களில் கலந்து கொள்ளலாம்?

இது குறித்து விளக்கம் பெற சீதாராம் யெச்சூரியை தொடர்புக் கொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புக் கொள்ள முடியவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியில் சீதாராம் யெச்சூரிக்கு நெருக்கமான நண்பர், இதை சமய திருவிழாவாக பார்க்கக் கூடாது. பண்பாட்டு திருவிழாவாகதான் பார்க்க வேண்டும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்