நாளிதழ்களில் இன்று: 'காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்'

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்

படத்தின் காப்புரிமை Hindustan Times

காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்கறி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கைப் பைகளின் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தொழில் முனைவோர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்று திரும்பிய இந்திய இளைஞர்கள் சிலர், இந்தியாவில் காய்கறி கழிவுகளில் இருந்து கைப் பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கியுள்ளனர். அப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது என்றும், மண்ணில் விரைவாக மக்கி போய்விடும் என்று மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தினமலர்: மாநில அரசின் அங்கீகாரம் கட்டாயம்

படத்தின் காப்புரிமை Getty Images

அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற்று, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை பின்பற்ற வேண்டும் என சி.பி.எஸ்.இ வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தந்த மாநிலங்கள் இயற்றியுள்ள, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாமல் பள்ளிகளை இயக்கினால், அந்த பள்ளிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளிகளுக்கான சி.பி.எஸ்.இ இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்): பெண்ணை வன்புணர்வு செய்த 40 ஆண்கள்?

படத்தின் காப்புரிமை Getty Images

ஹரியானாவின், பஞ்ச்குலா மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவர் தன்னை 40 ஆண்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ் அதிகாரி அன்ஷூ சிங்க்ளா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை, ஹரியானா காவல்துறை அமைத்துள்ளது.

சொகுசு விடுதி ஒன்றில் தன்னை வைத்து 40 பேர் தன்னை 4 நாட்கள் வன்புணர்வு செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: