நாளிதழ்களில் இன்று: 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி : 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ

படத்தின் காப்புரிமை Getty Images

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ போல் சிங் மீனா, 59 வயதிலும் படிப்பை தொடர்ந்து வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உதய்ப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான போல் சிங், தனது நான்கு மகள்கள் அளித்த உத்வேகத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து தற்போது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அது தனக்கு மன நிறைவை தருவதாக குறிப்பிட்ட போல் சிங், கல்வி விழிப்புணர்வு குறித்து உற்சாகமாக பிரசாரம் மேற்கொள்ள முடிவதாக கூறினார் என்கிறது இந்த நாளிதழ் செய்தி.

தினமலர்: திமுக தலைவராகிறார் ஸ்டாலின்

படத்தின் காப்புரிமை FACEBOOK/M.K.STALIN

திமுக தலைவர் கருணாநிதியால், இனி சுறுசுறுப்பாக செயல்பட முடியாது என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தி உள்ளதால், குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவும், கட்சியை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக, ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. திமுக மாநில நிர்வாகிகள் பலரும், மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து(ஆங்கிலம்) : பெங்களூரில் அதிகரித்த பப்புகள்

படத்தின் காப்புரிமை Getty Images

பப்புகளின் (Pubs) தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் கடந்த நான்கு ஆண்டுகளில் பப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக ’தி இந்து’ நாளிதழ் செய்தி.

2014ஆம் ஆண்டு பெங்களூரில் 269 பப்புகள் இருந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 50.9 சதவீதம் அதிகரித்து 406 பப்புகள் இருப்பதாக அச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்