நாளிதழ்களில் இன்று: பொறியியல் படிப்புகளுக்கும் 'நீட்' தேர்வு?

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்): பொறியியல் படிப்புக்கும் 'நீட்' தேர்வு?

படத்தின் காப்புரிமை Getty Images

பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்த பரிந்துரை இருப்பதாகவும், இத்தேர்வுகள் 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படலாம் என தொழில்நுட்ப கல்விக்கான அனைத்திந்திய கவுன்சில் (ஏஐசிடிஇ) துணை தலைவர் பூனியா கூறியதாக ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகளுக்கே எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர அடுத்த ஆண்டிலேயே நீட் தேர்வு நடத்தப்படலாம் என்று பூனியா கூறியுள்ளார்.

தினமணி: ஜி.எஸ்.டி விகிதம் மேலும் குறைப்பு?

படத்தின் காப்புரிமை Getty Images

சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 28வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றதில், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 88 பொருட்களுன்னு வரியை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நாப்கின்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது.

மேலும் பல முக்கிய பொருள்கள் 5 சதவீத ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராகவே உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்ததாக நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர்: மாநில உரிமையில் தலையிடாது

புதிதாக உருவாக்கப்படவுள்ள உயர் கல்வி ஆணையம், சுதந்திரமான அமைப்பாக செயல்படும் என்றும், மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில் இந்த அமைப்பின் செயல்பாடு இருக்காது என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக தினமலர் நானிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி மற்றும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு ஏற்கனவே அமலில் உள்ள ஒதுக்கீடுகளில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்