இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை விதைக்கும் கலாமின் பொன் மொழிகள்!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் துறையில் பல சாதனைகளை புரிந்த அவர், குழந்தைகளை சந்தித்து பேசுவதில் விருப்பம் கொண்டிருந்தார். குழந்தைகளிடையே அவர் ஆற்றிய பல உரைகள் பிரபலமானவை. அவற்றிலிருந்து சில பொன்மொழிகளை தொகுத்து வழங்குகிறோம்.

"கனவு காணுங்கள். ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு."

குழந்தைகளுடன் கலாம் படத்தின் காப்புரிமை STRDEL/AFP/Getty Images
line break

"நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன."

குழந்தைகளுடன் கலாம் படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images
line break

"கனவு காணுங்கள். கனவு எண்ணங்கள் ஆகும், எண்ணங்கள் செயல்கள் ஆகும்."

குழந்தைகளுடன் கலாம் படத்தின் காப்புரிமை SEBASTIAN D'SOUZA/AFP/Getty Images
line break

"உன்னுடைய இலக்கினை அடையும் வரை, மிகவும் கடினமான சண்டைகளை நீ போட வேண்டும்."

குடியரசு தலைவர் மாளிகையில், மாணவர்களுடன் கலாம். படத்தின் காப்புரிமை PRESIDENTIAL PALACE/AFP/Getty Images
Image caption குடியரசு தலைவர் மாளிகையில், மாணவர்களுடன் கலாம்.
line break

"நீ யார் என்பது முக்கியமல்ல. உனக்கென்று ஒரு பார்வை இருந்து, அதை அடையக்கூடிய உறுதி உனக்கு இருந்தால், நீ நிச்சயம் அதை செய்வாய்."

குழந்தைகளுடன் கலாம் படத்தின் காப்புரிமை DESHAKALYAN CHOWDHURY/AFP/Getty Images
line break

"புத்தகங்களே நிரந்தர தோழர்கள். சில நேரங்களில், அவை நமக்கு முன்பு பிறக்கின்றன, நம் வாழ்க்கை முழுவதும், நம்மை வழிநடத்துகின்றன. பல தலைமுறைகளுக்கு அவை தொடர்கின்றன."

குழந்தைகளுடன் கலாம் படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images
line break

"படைப்பாற்றல் என்பது, ஒரே விஷயத்தை பார்த்தாலும், அதை வேறு வழியில் சிந்திப்பது."

நிகழ்ச்சிக்கு பிற்கு குழந்தைகள் கலாமுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். படத்தின் காப்புரிமை RAVEENDRAN/AFP/Getty Images
line break

"நாம், நமது நம்பிக்கைகளை போல இளமையாகவும், நம் சந்தேகங்களை போல முதுமையாகவும் இருக்கிறோம்."

கலாமிற்கு மாலையிடும் குழந்தை படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images
line break

"நீங்கள் சூரியனை போல ஒளிர வேண்டும் என்றால், முதலில், சூரியன் போல எரிய வேண்டும்."

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்