குஜராத்தில் சிறுத்தையிடம் சிக்கிய நான்கு மாத குழந்தை

  • 31 ஜூலை 2018

குஜராத்தில் ஒரு குழந்தையை அதன் தாயிடம் இருந்து பறித்தது சிறுத்தை. காயமடைந்த நான்கு மாத குழந்தைக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை Bhargav Parikh

இருசக்கர வாகனமொன்றில் தனது கணவனுக்கு பின்பாக தனது குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார் நான்கு மாத குழந்தையின் தாய். அப்போது சிறுத்தை தாக்கியது.

அக்குழந்தையின் தந்தை உதவி வேண்டி கத்தினார். கிராமத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து விலங்கை சுற்றி வளைத்தனர்.

''கிராமத்தினர் கத்தியதால் பயந்த சிறுத்தை குழந்தையை போட்டு ஓடியது'' என வனத்துறை அதிகாரி பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.

அதிகாரிகள் ரோந்து செல்லும் வனப்பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை Bhargav Parikh

'' நாங்கள் இந்நிகழ்வு குறித்த தெரிந்தவுடன் விரைவாக செயல்பட்டோம் '' என சம்பவத்தின்போது பணியில் இருந்த வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.'' தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே காயம் உள்ளது. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது'' என அவர் தெரிவித்தார்.

மருத்துவர் ராஜீவ் தேவேஷ்வர் கூறுகையில், குழந்தை மற்றும் அதன் தாய் தற்போது நலமாக உள்ளனர் சிகிச்சையின் மூலம் குணமைடைந்து வருகிறார்கள் என்றார் .

பிபிசி குஜராத்தியிடம் பேசிய உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மகேஷ் பாண்டியா, ''விலங்குகள் பல்லாண்டுகளாக புழங்கிவந்த பகுதியில் மனிதர்கள் அத்துமீறி குடியேறியதால் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன'' என்றார்.

இந்தியாவில் மனித- விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. விலங்கினங்கள் வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் யானைகள், புலிகள், சிறுத்தைகள் அடிக்கடி மனிதர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடுகின்றன.

நாட்டில் 12,000 முதல் 14,000 சிறுத்தைகள் வரை இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் கொல்லப்படுகிறது.

கடந்த வருடம் இந்தியாவில் கார் தொழிற்சாலையில் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் 36 மணி நேரம் செலவிட்டனர். வேலையாட்கள் வெளியேற்றப்பட்டு தொழிற்சாலை தற்காலிகமாக அப்போது மூடப்பட்டது.

2016ல் பெங்களூருவில் ஒரு பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்தது. மயக்கமருந்து செலுத்திப் பிடிப்பதற்கு சுமார் பத்து மணிநேரம் ஆனது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்