போராட்டக்காரர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாமா?

  • 2 ஆகஸ்ட் 2018

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ் ஆட்சியா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"போராட்டக்காரர்களை ஒடுக்க தேசியப் பாதுகாப்பு சட்டத்தை போலீஸ் கையாள்வது சரியா," என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

உலக நட்பு என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர் இவ்வாறு கூறுகிறார், "மொத்தத்தில் தமிழக ஆட்சியாளர்களுக்கு படிப்பறிவு சுத்தமாக இல்லை. நிர்வாகத் திறனும் கிடையாது. அதனால் காவல்துறை தானாக அதிகாரத்துடன் செயல்படுகிறது இது வருந்தத்தக்கது மிகவும் வன்மையாக கண்டிக்க கூடியது."

"ஆட்சியாளர்களை மக்களுக்கு பிடிக்கவில்லை! போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை," என்கிறார் நந்தகுமார்.

"144 தடை அமுலில் இருக்கும் போது கூட்டத்தை கூட விடாமல் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், கூட விட்டு கூட்டியவர்களைக் குறிபார்த்து சுட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று செல்லப்பா ஈஸ்வர் எனும் பிபிசி நேயர் கூறியுள்ளார்.

"குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை காவல்துறையினர் எடுக்கலாம். பொது அமைதிக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் அவசியம் பயன்படுத்த வேண்டும்," என்கிறார் நெல்லை முத்துச்செல்வம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: