சட்டப்பிரிவு 35-ஏ நீக்கப்பட்டால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துவிடுமா?

"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 35-ஏ முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் அது இந்தியாவில் இருந்து பிரிந்துவிடும்" என்கிறார் 2010ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த ஷாஹ் ஃபைஸல் என்ற அதிகாரி.

காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

சட்டப்பிரிவு 35-ஏ, விவாகரத்துடன் ஒப்பிடக்கூடியது என்று கூறும் அவர், பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும். விவாகரத்து செய்ததும் திருமண உறவு முறிந்துவிடும். அதன்பிறகு சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று விளக்குகிறார்.

இந்தியாவுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் இடையிலான இணைப்பு என்பது திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்த நிலை என்று கூறும் ஃபைஸல், திருமணமே நடக்காமல் தம்பதிகள் ஒன்றாக வாழமுடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்.

இருந்தபோதிலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்றும் ஃபைஜல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய ஃபைஸல், "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு யாரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. அரசமைப்பு சட்டத்தின்படி, ஜம்மு-காஷீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அந்த மாநிலத்திற்கான ஒரு சிறப்பு ஏற்பாடு."

உண்மையில் 35-ஏ சட்டப்பிரிவு என்றால் என்ன? இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டால், ஜம்மு-காஷ்மீருக்கும் இந்தியாவுக்குமான உறவு முறிந்துவிடுமா?

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பிரிவினைவாதிகளோ, கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே மாநிலத்தில் கடைகளும் வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

டெல்லியை சேர்ந்த 'வீ சிட்டிசன்' என்ற அரசுசாரா அமைப்பு, 35-ஏ சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370இன் கீழ், சுயாட்சி அதிகாரம் வங்கப்பட்டுள்ளது, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES

சட்டப்பிரிவு 35-ஏ என்ன சொல்கிறது?

சட்டப்பிரிவு 35-ஏ வின் கீழ், இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளது. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.

மேலும் மாநிலத்தை சேராதவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் வேலைவாய்ப்புகள் எதையும் பெறமுடியாது. காஷ்மீர் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால், அவரும், அவரது வாரிசும் சொத்துரிமையை இழப்பார்கள்.

1954ஆம் ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவின் படி 35-ஏ சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் சட்டப்பிரிவு 370- உடன் சேர்க்கப்பட்டது. இது, மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதை தீர்மானிக்க்கும் அதிகாரத்தை 35-ஏ பிரிவு மாநில அரசுக்கு வழங்குகிறது. மேலும் சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காதவாறு, அம்மாநில சட்டப்பேரவை எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.

காஷ்மீர் அரசரால் ஏற்கனவே வரையறுக்கப்பட்டு 1927 மற்றும் 1932ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நிர்வாக நடைமுறைகளையும் இந்த சட்டப்பிரிவுகள் ஏற்றுக்கொள்கின்றன. காஷ்மீர் மக்கள் எங்கு வசித்தாலும் அவர்களுக்கு இந்த சிறப்புச் சட்டங்கள் பொருந்தும்.

பட மூலாதாரம், Getty Images

மோதி அரசின் உத்தரவின் அடிப்படையில்தான், அரசமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் பொது மனோபாவமாக இருப்பதாக கூறப்படுகிறது.

1954ஆன் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிரந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

அரசியலமைப்பின் இந்த இரண்டு பிரிவுகளுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. 64 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு விவாதிக்கப்படுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அங்கு இல்லை, ஆளுநர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு இயங்குகிறது. இந்த நிலையில், மாநில ஆளுநர் என்.என்.வோராவின் தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மாநிலத்தில் விரைவில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: