கருணாநிதி மரணம்: காவேரி மருத்துவமனை முதல் ராஜாஜி அரங்கம் வரை

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார்.

6.29: நடிகர் ராதாரவி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

6.17: கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

6.10: கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தினகரன்.

6.00: கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

5.40: கருணாநிதி உடல் அருகே இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.

5.35: ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது கருணாநிதி உடல்

5.00: ராஜாஜி ஹால் புறப்பட்டார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

4.50: கருணாநிதியின் உடலை சி.ஐ.டி காலனியிலிருந்து ராஜாஜி ஹால் எடுத்து செல்ல ஏற்பாடு.

4.40: கருணாநிதி உடலுக்கு ப.சிதம்பரம் அஞ்சலி

3.00: சி.ஐ.டி காலனியில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2:00: சிஐடி காலனி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடலுக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1:30: ஜெயலலிதாவை மெரினாவில் புதைக்க அனுமதி தரும் நீதி, கலைஞருக்கு மறுக்கிறதென்றால்... அழிக்கப்பட வேண்டிய 'மனு' நீதி அது என்று தெரிவித்துள்ளார்- முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்

1:10: அண்ணா சமாதியில் - கருணாநிதிக்கு இடம் கோரும் வழக்கு காலை 8 மணிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவு

0:20: ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்து கொள்ளட்டுமா - கருணாநிதி குறித்து ஸ்டாலின் உருக்கமான கடிதம்

"எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர் தலைவரே இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்" என்று தொடங்கும் அந்த உருக்கமான கடிதம்…"அப்பா என்பதைவிட தலைவரே என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை இப்போது அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? என்று முடிகிறது."

பட மூலாதாரம், M.K.Stalin/Facebook

00:10: "கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய கோரும் அண்ணா சமாதி இருக்கும் இடம் கோஸ்டல் சோன் பகுதியில் வரவில்லை. அது இருப்பது கூவம் பகுதி. சொந்த பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார் கிரிஜா வைத்தியநாதன்.வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்." என மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களுக்கு நினைவிடம் கொடுப்பது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

00:02: பீகார் மாநிலத்தில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

23:45: மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய கோரப்பட்ட மனுவின் விசாரணை தொடங்கியது.

23:40 : திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

23:35: திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் வருகை.

23:40 : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்

23.15: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டிற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் வருகை.

23.05: அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம்! சட்டமும் அரசும் தயை கூர்ந்து அண்ணா சமாதி அருகே இடம் கொடுத்தல் நலம் என நடிகர் விவேக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

22.50: தி.மு.க மூத்த தலைவர்கள் கோபாலபுரம் வருகை.

22.40: பொதுமக்களின் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்படவுள்ள நிலையில் அங்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

22.30: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த பேரறிஞரும், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியுமான கலைஞர் அவர்களது உடல் அடக்கத்திற்கு அண்ணா சமாதி அமைந்திருக்கும் வளாகத்தில் இடம் தருவது அந்த மாபெரும் தலைவருக்கு செய்யப்படும் மரியாதை என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

22.18: சென்னை வந்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி

22.15: கோபாலபுரம் சென்றடைந்தது கருணாநிதியின் உடல்.

22.10: மெரினாவில் இடம் தர வேண்டுமென்று வலியுறுத்தி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Twitter

22.02: “வேண்டும், வேண்டும், மெரினா வேண்டும்” என்று ஆதரவாளர்கள் தொடாந்து கோஷமிட்டு வருகிறார்கள். #Marina4Kalaignar என்ற கேஷ்டேக் உருவாக்கி கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

22.00: "சட்டத்தை பார்க்காதீர்கள். கருணாநிதியின் சரித்திரத்தை பாருங்கள்" என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதிக்கு இடம் அளிகாததற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

21.59: கருணாநிதியின் அடக்கத்திற்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி‘ என்று மார்க்ஸிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

21.57:கருணாநிதியின் மறைவால் துயருறும் அவருடைய குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

21.52: மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு இடம் ஒதுக்க அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21.50: மெரினாவில் இடம் ஒதுக்க கலைஞருக்கு எல்லா உரிமையும் உண்டு என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல்.

21.47: கருணாநிதியின் மறைவுக்கு நாளை புதன்கிழமை கர்நாடக மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21.45: தமிழக முன்னாள் மறைவையொட்டி மத்திய அரசு சார்பாக நாளை புதன்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கபடும். டெல்லி உள்பட நாடு முழுவதும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

21.42: தமிழ் நாடு முழுவதுமள்ள 4,800 பெட்ரோல் நிலையங்கள் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பெட்ரோல் பங்கு உரிமையாளர் சற்க தலைவர் மரளி தெரிவித்துள்ளார்.

21.40: கருணாநிதியின் உடல் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் கோபாலபுரத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படுகிறது.

21.05: ஆழ்வார்பேட்டை எங்கும் தொண்டர்களின் அழுகுரல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

21.00: கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் எடுத்து செல்லப்பட்டது.

20.55: கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு. இதனை இன்றிரவே அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரிக்கை.

20.42: மெரினாவில் இடம் ஒதுக்காததால கோபமடைந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீஸ் தடுப்புகளை உடைத்தனர். இதனை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் தடியடி மேற்கொண்டனர்.

20.40: "வேண்டும் வேண்டும்... மெரினா வேண்டும்" - என்று மருத்துவமனை வளாகத்திலும் கோபாலபுரத்திலும் கோஷம் எழுப்பி வருகிறார்கள் திமுக தொண்டர்கள்.

20.38: கருணாநிதியின் உடலை காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் எடுத்து செல்ல ஏற்பாடு.

20.15: "80 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான தலைவர் கருணாநிதிக்கு அவர்களுக்குரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் சென்னை காமராசர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்திற்குள் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கிடுமாறு முதலைச்சரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், DMK

20.00: இரவு 8. 30 மணி முதல் 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும், நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை சிஐடி காலனி இல்லத்திலும், அதிகாலை 4 மணி முதல் இராஜாஜி ஹாலிலும் பொதுமக்கள் பார்வைக்கு கருணாநிதி உடல் வைக்கப்படும்.

19.55: கருணாநிதியின் உடலை சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அடக்க செய்ய இடம் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.முன்னதாக கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்க செய்ய, ஸ்டாலின் கையெழுத்திட்ட மனுவை தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுகவினர் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

பட மூலாதாரம், DIPR

பட மூலாதாரம், DIPR

19.50: கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டி, ஸ்டாலின் கையெழுத்திட்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம் - துரைமுருகன்

19.40: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல்.

19.35: எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடமளித்து விடாமல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் - ஸ்டாலின் அறிக்கை

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டியது கழகத்தினரின் கடமை என ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

19.31: இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாளை சென்னை வருகை.

19.30: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நடிகர் சித்தார்த், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல்.

19.23: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

பட மூலாதாரம், Twitter

19.22: பா.ஜ.க தலைவர் அமித் ஷா இரங்கல்.

19.21: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்.

19:20: அலைப்பேசியில் உள்ள டார்ச் விளக்குகளை காட்டி தொண்டர்கள் மருத்துவமனையின் வெளியே கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

19:15: கருணாநிதி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

19.10: ரஜி்னிகாந்த் இரங்கல்

19.01: கருணாநிதியின் உடல் முதலில் மருத்துவமனையில் இருந்து அவரின் கோபாலபுர இல்லத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

19.00: புதுச்சேரியிலும் நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

18.56: திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததைத் தொடர்ந்து நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மேலும் அடுத்த ஏழு நாட்களுக்கு அரசின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

18.54: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

பட மூலாதாரம், Twitter

18.53: கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Twitter

18.52: கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Twitter

18:50: மாலை 6:10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

18:15 : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

18:10 : ராஜாஜி அரங்கம் போலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தகவல்

18:00 : கருணாநிதியின் வீட்டிற்கு உறவினர்கள் வர தொடங்கியுள்ளனர்.

17:55 : காவேரி மருத்துவமனை மற்றும் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

17:50 : கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மருத்துவமனையை சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

கடந்த சில மணி நேரங்களில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமான மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் முக்கிய உடலுறுப்புகள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் உடன் சென்றிருந்தார். இந்த சந்திப்புக்கான காரணம் எதையும் திமுக கட்சியோ, தமிழக அரசோ தெவிக்கவில்லை.

இன்று செவ்வாய்கிழமை 11வது நாளாக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை மருத்துவமனையில் இருந்து 6 அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

கடைசியாக வெளியான 6வது மருத்துவமனை அறிக்கையில், கருணாநிதியின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆயுதப்படையினர் சென்னை முழுவதும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனை வளாகத்தையும் பாதுகாப்பு படையினர் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை வாசலில் விடிய விடிய தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

பட மூலாதாரம், facebook/kalaignar89

நேற்று (திங்கட்கிழமை) மாலை கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளிவந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

அதிகளவிலான தொண்டர்கள் மருத்துவமனை வளாக பகுதியை சூழ தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images

மத்திய அமைச்சர் நி்தின் கட்கரி, திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி ,பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேற்று வந்தனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

ஆழ்வார்பேட்டையில் தொண்டர்கள்

காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தோற்று காரணமாக சிகிச்சை எடுத்துவரும் கருணாநிதியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வந்தனர்.

கடந்த வாரம் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் கருணாநிதியின் உடல்நலன் குறித்து நலம் விசாரித்தனர்.

காணொளிக் குறிப்பு,

கடும் வலியையும் நகைச்சுவை செய்த கருணாநிதி - சிறப்பு தொகுப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :