‘இந்த ஆர்மோனியம்தான் என் நண்பன்’ - உருகிய இளையராஜா

இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ்: 'சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது'

பட மூலாதாரம், Getty Images

'இசை வழியாக நான் செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதான். சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது' என்று கல்லூரி மாணவிகள் மத்தியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறினார் என்கிறது இந்து தமிழ் செய்தி.

இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான் என்று அவர் கூறியதாகவும், அரசியல்வாதிகள்தான் தங்களை பொது இடங்களில் இப்படி காட்டிக் கொள்ளவேண்டும்.. அப்படி பிரதிபலிக்க வேண்டும் என நினைத்து, உள்ளுக்குள் ஒன்றை வைத்து, வெளியே எளிமை யாக, பணிவாக இருப்பதுபோல காட்டிக்கொள்வார்கள். நான் அதுபோன்ற நடிகன் அல்ல. என் இயல்பு என்னவோ அப்படித்தான் இருக்கிறேன் என்று மாண்வர்களிடம் பேசியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் கைது'

திருச்சி விமானநிலையத்தில் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 6 சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், கணக்கில் வராத ரூ.9 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.இதில் சில பயணிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்தது. அந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்கள் கடந்த 3 மாதங்களில் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது என்றுன் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: ' காங்கிரஸ் அணியில் இணைய கமல் சிக்னல்'

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் இணைய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிக்னல்' கொடுத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

"நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. அது மேலும் விரிவடையும். காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல்ஹாசன் சிக்னல்' கொடுத்துள்ளார். அதிமுக பக்கம் ரஜினிகாந்த் செல்வதால் அவருக்கு லாபம் இல்லை. பிரிந்த அதிமுக அணிகள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

காங்கிரஸ் அணியில் இணைவதற்கு சிக்னல்' எதுவும் கொடுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

சாம்பார் வாளி தூக்கியவர்களிடம் பல கோடி ரூபாய்

பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சாதிவாரி கணக்கெடுப்பு'

பா.ம.க தலைவர் ஜி.கே. மணி மற்றும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழு ஒன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

அதுபோல, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :