மகாராஷ்டிரா: வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக மூவர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு, மூன்று பேரை கைது செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை SANATAN SANSTHA
Image caption வைபவ் ரெளட் (இடது) மற்றும் சுதன்வா கோண்டலேகர்

கைது செய்யப்பட்டுள்ள வைபவ் ரெளட், ஷரத் கலாஸ்கர், சுதன்வா கோண்டலேகர் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காலாஸ்கரின் வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தீவிரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Ani tweet

மும்பையில் உள்ள வைபவ் ரெளட்டின் வீட்டில் இருந்து 22 பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டவர்கள்.

சன்ஸ்தான் சந்தா என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக வைபவ் ரெளட் கூறினாலும், அந்த அமைப்பு, ரெளட் தங்கள் அமைப்பின் உறுப்பினர் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

சன்ஸ்தான் சந்தாவின் சுனில் கன்வட், 'இந்து கோவன்ஷ் ரக்‌ஷா சமித்' என்ற அமைப்பின் உறுப்பினர் ரெளட் என்று கூறியுள்ளார். வைபவ் இந்துத்துவாவின் ஆதரவாளர் என்றும் அவருக்கு அனைத்து விதங்களிலும் ஆதரவளிப்பதாக அவரின் வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர் தெரிவித்தார்.

Image caption சஞ்சீவ் புனலேகர்

"வைபவ் ஒரு பசு பாதுகாவலர், ஈகை திருநாளின் போது மாடுகள் கொல்லப்படுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு அவரது வாழ்க்கையை அழித்துவிட முயற்சிக்கிறது" என்று சஞ்சீவ் புனலேகர் கூறுகிறார்.

சுதான்வா கோந்தலேகர், சாம்பாஜி பீடேயின் சிவப்ரடிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் என கூறப்படுகிறது.

'அவர் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் தான், ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் எங்களுடன் இணைந்து செயல்படவில்லை' என டிவி-9 செய்தி ஊடகத்திடம் பேசிய சிவப்ரடிஸ்தான் அமைப்பின் நிதின் செளகுலே தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :