மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

  • 13 ஆகஸ்ட் 2018
somnath chatterjee படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தா மருத்தவமனையில் உடல் நலக் குறைவால் உயிர் பிரிந்தது.

பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சோம்நாத்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேட்டர்ஜி 2004 - 2009 ஆண்டு காலக்கட்டத்தில் மக்களவை சபாநாயகராக இருந்தார்.

சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்