20 பேரை பலி கொண்ட இத்தாலி தொங்கு பால விபத்து நடந்தது எப்படி?

  • 14 ஆகஸ்ட் 2018
இத்தாலியில் பாலம் இடிந்து வாகனங்கள் நொறுங்கின: 20 பேர் பலி படத்தின் காப்புரிமை AFP

இத்தாலியின் வட மேற்கில் அமைந்துள்ள ஜெனோய நகரில் வாகனம் செல்லும் பாலம் ஒன்றின் பெரும்பகுதி இடிந்து குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தொங்கு பாலத்தின் ஒரு பகுதியை தாங்கிய ஒரு கோபுரம் இடிந்தவுடன் இந்த பாலத்தில் சென்ற பல கார்கள் மற்றும் லாரிகள் தரையில் விழுந்து நொறுங்கின.

கடும் புயலின்போது இந்த சம்பவம் நிகழந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

நசுங்கிய வாகனங்கள் அல்லது இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற அவசர கால ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர். மோப்ப நாய்களை கொண்டு அவர்கள் ஆட்களை தேடி வருகின்றனர்.

காயமடைந்த பலரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

1960ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட .இந்த பாலத்தில் இரண்டு ஆண்டுக்கு முன்னர்தான் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.இத்தாலியின் வட மேற்கில் அமைந்துள்ள ஜெனோய நகரில் வாகனம் செல்லும் பாலம் ஒன்றின் பெரும்பகுதி இடிந்து குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :