காவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை

  • 17 ஆகஸ்ட் 2018
காவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கரையோர பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை ஏற்கனவே முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து முழுவதும் அப்படியே 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுவதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

குறிப்பாக மேட்டூரிலிருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் பிரதான சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து மேலும் அதிகளவில் தண்ணீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் அனல் மின்நிலையத்தை ஒட்டிய எடப்பாடி பிரதான சாலை மற்றும் காவிரி ஆற்று பாலங்களில் சிவப்பு (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவிரி கரையோரங்களில் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகளவு நீர்வரத்து உள்ளது என்பது குறிம்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்