‘காலம் முழுவதும் கருணாநிதி மேற்கொண்ட யோகா இதுதான்’ - விவரிக்கும் என்.ராம்

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி உடல் தகன செய்தியும், கேரள பெரு வெள்ளமும் பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

இந்து தமிழ்: 'கருணாநிதியின் வாழ்நாள் யோகா'

எழுதுவதை அவர் வாழ்நாள் யோகாவாக மேற்கொண்டிருந்தார். தினமும் 6 மணி நேரம் எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று 'இந்து' என்.ராம் பேசியுள்ளார்.

'கருத்துரிமை காத்தவர் கருணாநிதி' என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் என்.ராம், "கருணாநிதி மிகச்சிறந்த உழைப் பாளி, படைப்பாளி, நிர்வாகி. தொட்ட துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தார். சிறுகதை, நாவல்,திரைக்கதை என அனைத் திலும் கோலோச்சினார். 1969-ம் ஆண்டிலிருந்து கருணாநிதியுடன் பழகி வருகிறேன். 45 ஆண்டு களுக்கும் மேலாக நன்றாக பழகி வந்தோம். அவரை எனது மூத்த நண்பராக, எழுத்தாளராக, அறிவுஜீவியாக கருதினேன். திராவிட இயக்கத்தில் 15-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இருந்தன. அவற்றில் 'முரசொலி', 'விடுதலை' ஆகியவை இன்றும் உள்ளன.

எழுதுவதை அவர் வாழ்நாள் யோகாவாக மேற்கொண்டிருந்தார். தினமும் 6 மணி நேரம் எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். மாநில, தேசியம் மட்டுமின்றி சர்வதேச பிரச்சினைகள், அரசியல், வரலாறு, பொருளாதாரம், கலை என எல்லாவற்றையும் எழுதினார். நெருக்கடி காலத்தில் பல தந்திரங் களை கையாண்டார். கரிகாலன் என்ற பெயரில் எழுதினார். நெருக்கடி காலத்தில் தமிழ்நாடு மட்டும்தான், ஆட்சியில் இருந்த போதும் மத்திய அரசை எதிர்த்தது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தது. இது கருணாநிதியின் மிக முக்கியமான பங்களிப்பு. நெருக்கடி நிலையைக் கண்டு அவர் பயப்படவில்லை.

கருணாநிதி இலக்கிய இதழியலைக் கையாண்டார். படிப்பதற்கு கடினமாக இருக்காது. அதேசமயம் முக்கியமான விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். வாசகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் இதழியல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எல்லா காலகட்டத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாத்தார். கருணாநிதியின் இலக்கிய இதழியல் குறித்து திமுக ஆய்வு செய்ய வேண்டும். அவரது எழுத்து நடை, மையக்கருத்து, இதழியலுக்கான கடின உழைப்பு, தாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்." என்று அவர் பேசியதாக அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'காவிரி வெள்ளம்: கொள்ளிடம் இரும்பு பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம்'

மணல் அரிப்பால் விரிசல் ஏற்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படக்குறிப்பு,

கோப்புப் படம்

"காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய இரும்பு பாலத்தின் 6-வது தூணில் மணல் அரிப்பால் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த தூண் ஆற்றுக்குள் 2 அடி இறங்கியது. தொடர்ந்து அந்த தூண் மண்ணில் புதைந்து வருவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசலில் ஆற்றைக் கடந்த மணப்பெண்'

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேறு வழி இல்லாததால் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் அப்பகுதியைச் சேர்ந்த மணப்பெண் அரசு அதிகாரிகளின் அனுமதியுடன் பரிசலில் ஆற்றை வெள்ளிக்கிழமை கடந்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"கன மழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மளிகைப் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் பரிசல் மூலமாக ஆற்றைக் கடந்து பவானிசாகர் அல்லது சத்தியமங்கலம் செல்ல வேண்டும். ஆனால், அதிக அளவு வெள்ளப்பெருக்கால் பரிசல் மூலம் மூன்று நாள்களாக ஆற்றைக் கடக்க முடியவில்லை.

இந்நிலையில், கோத்தகிரியிலிருந்து வந்த பத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை இரவில் பரிசலில் செல்ல மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடை விதித்தனர். ஆற்றைக் கடக்க இயலாமல் காட்டுக்குள்ளே இருக்கும் பேருந்துக்குள்ளும், பேருந்து நிலையத்திலும் அவர்கள் படுத்து உறங்கினர். வெள்ளிக்கிழமை காலையும் ஆற்றில் நீரின் அளவு குறையாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஊரைச் சேர்ந்த, திங்கள்கிழமை திருமணம் ஆக இருக்கும் மணப்பெண், உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் மட்டும் அவசர வேலை காரணமாக காவல் துறை, வனத் துறை, அரசு அதிகாரிகளின் அனுமதியுடன் பரிசலில் ஆற்றைக் கடந்து சென்றனர்." என்று விவரிக்கிறது நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், இந்து தமிழ்

படக்குறிப்பு,

இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான கார்ட்டூன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சென்னை விமானநிலையத்திலிருந்து தப்பித்த சிங்களர்'

உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த சிங்களர் ஒருவர் விமானநிலையத்திலிருந்து தப்பியதாக விவரிக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. சென்னை நகருக்குள் அவர் புகுந்திருக்கலாம் என்றும் அந்த நாளிதழ் விவரிக்கிறது. இருபத்து எட்டு வயதான நகை மடார் எனும் அந்த இளைஞர் டோகாவிலிருந்து சென்னை வந்ததாக கூறுகிறது அந்நாளித செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :