கேரளா வெள்ளம்: ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு

கேரளாவில் நிகழ்ந்துள்ள பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளா வெள்ளம்: ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு

இன்று (சனிக்கிழமை) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கேரள வெள்ளம் குறித்து பேசிய பினராயி விஜயன், என்டிஆர்ஃஎப், கடலோர காவல்படை, சிஆர்பிஃஎப், பிஎஸ்ஃஎப், போர் பாதுகாப்பு படை, எஸ்.பி.ஆர்ஃஎப், வருவாய் துறை, தீயணைப்புப் படை அனைவரோடும் ஆலோசனை செய்து தற்போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

இன்று மட்டும் 33 பேர் இறந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இன்று 58, 506 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலோனோர் படகுகளால் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், CHIEF MINISTER'S OFFICE, KERALA

படக்குறிப்பு,

பினராயி விஜயன்

மத்திய நிறுவனங்களிள் ஆலோசனை மேற்கொண்டே இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலக்குடி மற்றும் செங்கண்ணூரில் அதிக மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென விவாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மீட்புதவி பணிகளில் 22 ஹெலிகாப்டர்கள், 83 கடற்படை படகுகள், கேரளா தீயணைப்பு படையின் 59 படகுகள், தமிழ் நாடு மற்றும் ஒடிஸா மாநிலங்களின் தீயணைப்பு அணிகள், 3,200 தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

'ஏமாற்றம் அளிக்கிறது பிரதமரின் அறிவிப்பு'

முன்னதாக,இன்று கேரள வெள்ள நிவாரணத்திற்கு இடைக்கால நிதியாக 500 கோடி ரூபாய் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

ஏற்கெனவே 100 கோடி ரூபாய் வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர், ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதற்கட்ட நிதியாக 2000 கோடி ரூபாய் கேட்ட நிலையில் ஐநூறு கோடி மட்டும் அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :