'வெளிநாட்டில் இருந்து கட்சிகளுக்கு நிதி வரலாம்; மக்களுக்கு மட்டும் உதவக்கூடாதா?'

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகள், கேரள வெள்ளத்துக்கு வழங்கிய உதவித்தொகையை முந்தைய கொள்கையை காரணம் காட்டி இந்தியா ஏற்கவில்லை.இக்கட்டான தருணத்தில் கேரளாவுக்கு கிடைத்த உதவியை தடுப்பதாக மத்திய அரசின் நிலைப்பாடு அமைகிறதா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்களின் மறுமொழியை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.

ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமர் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும்

பட மூலாதாரம், Anadolu Agency

பிராவோ சுகன் என்ற நேயர் ''வெளிநாடுகளின் உதவிகளை இந்தியா மறுப்பது இது முதல் முறையல்ல. 2013 ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ளத்தின் போதும் அப்போதைய காங்., தலைமையிலான அரசும் வெளிநாடுகளின் உதவிகளை மறுத்து விட்டது. 2005 ல் காஷ்மீரில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தின் போதும், 2017 காஷ்மீர் வெள்ளத்தின் போதும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அளித்த நிதியை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது'' என குறிப்பிட்டுள்ளார்.

''வெளிநாட்டு நிதி தேவையில்லையென்றால் மத்திய அரசே போதுமான நிதியை வழங்கவேண்டும்'' என்கிறார் அப்துல்லா அப்துல்ரஷீத்.

"தமிழ்நாட்டில் ஓகி புயலில் சிக்கிய மீனவர்களையும் காப்பாற்றவில்லை இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு இதுதான் கதி. உங்க உள்நோக்கம் நல்லா புரியுது.'' என எழுதியிருக்கிறார் இளங்கோவன் கே.ராமன்

கழுகாசலம் குறிப்பிட்டுள்ளதாவது, ''ஒவ்வொரு நாட்டுக்கும் வெளிநாட்டு கொள்கை உண்டு .இதில் அரசாங்கத்தை அவதூறாக சித்தரிப்பது கண்டனத்துக்கு உரியது''

''இன்னும் சுனாமி, தானே, வர்தா, சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் என தமிழகத்தை பாதித்த எந்த இயற்கை பேரிடருக்கும் முறையான நிவாரம் வழங்கப்படவில்லை. நிர்கதியாய் நிற்போர் பலர் உள்ளனர்'' என ட்விட்டரில் எழுதியுள்ளார் திரை மீளர்.

''இந்த 700 கோடி ரூபாய் நிதியை தடுக்கும் மத்திய அரசு, அந்த நிதியை மத்திய அரசு கேரளாவுக்கு வழங்கலாமே'' என எழுதியுள்ளார் கிறிஸ்துராஜ் ஃபிராங்ளின்.

''வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு நிதி வரலாம் .ஆனால் மக்களுக்கு உதவி செய்யக்கூடாது. இது என்ன நியாயம்?'' என குறிப்பிட்டுள்ளார் சபரிகிரி சந்திரசேகரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :